ரிலீஸுக்கு ரெடியாகும் சூரரைப் போற்று.. மலையாளத்தில் சூர்யாவுக்கு வாய்ஸ் கொடுத்த பிரபல ஹீரோ!

By

சென்னை: சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கான மலையாள டப்பிங்கை பிரபல நடிகர் கொடுத்துள்ளார்.

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் முடிவடைந்தது.

சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார்.

மோகன் பாபு

மோகன் பாபு

ஜாக்கி ஷெராப், கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன் பாபு முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து
தயாரித்துள்ளது.

விமானத்தில் ஷூட்டிங்

விமானத்தில் ஷூட்டிங்

விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஷூட்டிங் நடத்தியுள்ளனர். இந்தப் படத்தை கடந்த ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இடம்பெறவில்லை

இடம்பெறவில்லை

இந்நிலையில், இந்தப் படம் அமேசான் பிரைமில் வரும் 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாக நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். இந்நிலையில், அமேசான் வெளியிட்டுள்ள இந்த மாதத்துக்கான படங்கள் வெளியீட்டுப் பட்டியலில் சூரரைப் போற்று இடம்பெறவில்லை. சில தடையில்லா சான்றுகளை பெற வேண்டி இருப்பதால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

பாதுகாப்பு தொடர்பு

பாதுகாப்பு தொடர்பு

இந்நிலையில் நடிகர் சூர்யா, பட ரிலீஸில் ஏன் தாமதம் என்று விளக்கம் அளித்தார். படத்தில் இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய கதை என்பதால் பல அனுமதிகளை பெற வேண்டி இருந்தது என்று கூறியிருந்தார். அனுமதி கிடைத்ததை அடுத்து வரும் 12 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Recommended Video

Shivani Narayanan Classy dance for Suriya Kattu Payale song
நரேன் டப்பிங்

நரேன் டப்பிங்

இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியிட அமேசான் முடிவு செய்துள்ளது. மலையாளத்தில் நடிகர் சூர்யாவுக்கு நடிகர் நரேன் டப்பிங் கொடுத்துள்ளார். நரன், தமிழில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, கைதி உட்பட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X