பத்து எண்றதுக்குள்ள.. விக்ரமுடன் இணையும் நரேன் கார்த்திகேயன்!

By Shankar

விஜய் மில்டன் இயக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில், பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனும் நடிக்கிறார்.

சங்கர் இயக்கியிருக்கும் ‘ஐ' படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ‘பத்து எண்றதுக்குள்ள'. இதில் விக்ரமிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். பசுபதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ ஆர் முருகதாஸ்

ஏ ஆர் முருகதாஸ்

இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். விஜய் மில்டன் இயக்கி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

நேபாளத்தில்

நேபாளத்தில்

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் நேபாளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினர்.

கோவையில்

கோவையில்

அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக நவம்பர் 23-ம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கவுள்ளனர். இப்படத்தில் முக்கிய காட்சியாக அதிவேக கார் சேசிங் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

நரேன் கார்த்திகேயன்

நரேன் கார்த்திகேயன்

இதற்காக விஸ்வரூபம் படத்திற்கு ஸ்டண்ட் அமைத்த லீ வைட்டேகர், அதி நவீன கார்களை பயன்படுத்துவது பற்றி இந்தியாவின் முன்னணி கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் நரேன் கார்த்திகேயனும் இப்படத்தில் சில காட்சிகளில் நடிக்கவிருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X