கைதியை துரத்தும் போலீஸ் நரேன் - செகண்ட் இன்னிங்ஸ் ஸ்டார்ட்

சென்னை: நடிகர் நரேனுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு கைதி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது அவருக்கு மிக்க மகிழ்ச்சியளித்துள்ளது. அவர் அஞ்சாதே படத்திற்கு பிறகு பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அவர் அந்த படங்களை ஒப்புக்கொள்ளவில்லை.

அந்த வகையில் இந்த கைதி திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடம் வாய்த்ததால் இந்த வாய்ப்பை சரியான முறையில் சரியான தருணத்தில் பயன்படுத்தி கொண்டுள்ளார்.

Narain plays in Kaithi Movie as an important character

டிரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் கைதி. மாநகரம் திரைப்படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை இயக்கியுள்ள திரைப்படம் இது. இப்படத்தில் கதாநாயகி கதாபாத்திரம் கிடையாது.

இப்படம் முழுக்க முழுக்க இரவில் படமாக்கப்பட்டுள்ளது. லாரியை வைத்து பல சேஸிங் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. லாரி ஓட்ட வேண்டும் என்ற கார்த்தியின் பல நாள் கனவு இப்படம் மூலம் நிறைவேறியுள்ளது.

அஞ்சாதே நரேன், கலக்கபோவது யாரு புகழ் தீனா, யோகி பாபு, ஜார்ஜ் மரியான், ரமணா, பொன்வண்ணன், தலைவாசல் விஜய், மகாநதி ஷங்கர் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அஞ்சாதே திரைப்படம் மூலம் பிரபலமான நரேன், அதற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

அதனைத் தொடர்ந்து அஞ்சாதே, தம்பிக்கோட்டை, முகமூடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரிய இடைவெளிக்கு பிறகு கைதி திரைப்படத்தில் ஒரு ஸ்பெஷல் போலீஸ் ஆஃபீசராக நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் மூலம், தமிழ் சினிமாவிற்குள் ரீஎன்ட்ரி ஆகிறார்.

இப்படம் அவருக்கு ஒரு பெரிய பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார். இந்த படத்தில் அவர் கதாநாயகனுக்கு இணையான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்துள்ளார். கைதியை தேடும் ஒரு ஸ்பெஷல் ஆஃபீசராக நடித்துள்ள இப்படம் ஒரு செகண்ட் இன்னிங்ஸ்சாக இருக்கும். இதற்கு பிறகு அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் நிச்சயம் குவியும்.

அவர் அஞ்சாதே படத்திற்கு பிறகு பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அவர் அந்த படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. அந்த வகையில் இந்த கைதி திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடம் வாய்த்ததால் இந்த வாய்ப்பை சரியான முறையில் சரியான தருணத்தில் பயன்படுத்தி கொண்டுள்ளார்.

சத்தியன் சூரியன் ஒளிப்பதிவில் C.S.சாம் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 25ஆம் தேதியன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும். கார்த்தியின் 18ஆவது படமான இதற்கு மக்களிடம் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X