நரகாசுரன் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்... ரசிகர்கள் குஷி!
சென்னை : இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் இரண்டாவது திரைப்படமாக உருவானது நரகாசுரன் .
அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண்,ஆத்மிகா என பலர் இதில் நடித்துள்ளனர்.
நீண்ட காலமாக வெளியாகாமல் இழுபறியில் இருந்த இப்படம் இப்போது நேரடியாக ஓடிடியில் வெளியாக இருக்க ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் தெரியவந்துள்ளது.

லீட் ரோலில் ரகுமான்
தமிழ் சினிமாவில் த்ரில்லர் படங்களை இயக்கக்கூடிய இயக்குனர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். 2016 ஆம் ஆண்டு துருவங்கள் பதினாறு என்ற சூப்பர் ஹிட் த்ரில்லர் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் ரகுமான் இதில் லீட் ரோலில் நடித்திருக்க முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இயக்கிய இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கௌதம் வாசுதேவ் மேனன்
உடனடியாக கார்த்திக் நரேன் அடுத்த படத்தைத் தொடங்க அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா, சந்தீப் கிஷன், இந்திரஜித் ஆகியோர் நடிப்பில் உருவானது நரகாசுரன் . இந்த முறையும் த்ரில்லர் கதை களத்தைக் கொண்டு கார்த்திக் நரேன் இயக்கி இருக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளராக இருந்தார்.

குற்றம் சாட்டினர்
பணப்பிரச்சினை காரணமாக இப்படம் தொடர்ந்து வெளியாவது தடைப்பட்டு கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் கௌதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் இடையில் பேச்சு வார்த்தை முற்றி விரிசல் ஏற்பட்டு திரையுலகை பரபரப்பாக்கியது. இவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டினர்.

நேரடியாக ஓடிடியில்
இந்த நிலையில் நரகாசுரன் வெளிவருமா வெளிவராதா என்ற சந்தேகம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்க சில நாட்களுக்கு முன்பு நரகாசுரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற மகிழ்ச்சியான செய்தி ரசிகர்களை குஷியாக்கியது.

சோனி லைவ்
நரகாசுரன் ஓடிடியில் வெளியாக உள்ள தேதி எப்போது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாகும். கார்த்திக் நரேன் இப்போது தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் டி43 படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











