தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த நரப்பா...டிரெண்டிங் ஆன போஸ்டர்
ஐதராபாத் : தனுஷ் நடிப்பில் பிளாக்பஸ்டர் படமாக வசூலை குவித்த படம், அசுரன். சமீபத்தில் இந்த படம், சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதினையும் பெற்றது. இந்த படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
Recommended Video
இதில் ஹீரோவாக வெங்கடேஷும், அவருக்க ஜோடியாக பிரியாமணியும் நடிக்கிறார்கள். இவர்களுடன் கார்த்திக் ரத்னம், பிரகாஷ் ராஜ், முரளி சர்மா, சம்பத் ராஜ், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை சுரேஷ் புரொடெக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

நாரப்பா ரிலீஸ் எப்போது
நாரப்பா படத்தை, பிரம்மோற்சவம் படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் அட்டல்லா டைரக்டர் செய்கிறார். இந்த ஆண்டு மே 21 அன்று இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

யுகாதி ஸ்பெஷல் போஸ்டர்
தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி, டிரெண்டிங் ஆகி உள்ளது. ஹீரோ, தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த போஸ்டர் தெலுங்கு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
கொண்டாடும் ரசிகர்கள்
தெலுங்கு மக்கள் புத்தாண்டை கொண்டாடும் வேளையில், இந்த அசத்தலான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீசரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நாரப்பா
என்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை காண தமிழ் ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளஇந்த படம், தமிழை போன்று தெலுங்கிலும் பிளாக்பஸ்டர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











