அசுரன் தெலுங்குப்பட ரீமேக்... நாராப்பாவுக்கு யூ/ஏ சான்றிதழ்... படக்குழு அப்டேட்
ஐதரபாத் : நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் அசுரன்.
இந்த படம் வெங்கடேஷ் நடிப்பில் நாரப்பா என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக்காகியுள்ளது.
படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் புதிய அப்டேட் குறித்து படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தனுஷின் அசுரன் படம்
வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், தீஜே அருணாசலம் உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் அசுரன். கலைப்புலி எஸ் தாணு தன்னுடைய வீ கிரியேஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்திருந்தார்.

நாரப்பா படம்
இதனிடையே தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் பிரியாமணி லீட் கதாபாத்திரங்களில் நடிக்க இந்த படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படத்தை ஸ்ரீகாந்த் அடாலா டைரக்ட் செய்துள்ளார். தாணுவின் வீ கிரியேஷன்ஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

யூ/ஏ சான்றிதழ்
இந்த படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் படம் தற்போது சென்சார் செய்யப்பட்டு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
படத்தின் தயாரிப்பு நிறுவனமாக சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நாரப்பா சென்சார் செய்யப்பட்டு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் விரைவில் சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, விரைவில் சந்திப்போம் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











