அசுரன் தெலுங்கு ரீமேக் "நாரப்பா" ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா?
சென்னை : தமிழில் வசூல் வேட்டை நடத்திய அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
வெங்கடேஷ் தனுஷ் கதாபாத்திரத்திலும், பிரியாமணி மஞ்சு வாரியர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் இந்த படம் ரீமேக் செய்யப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்க ஓடிடியில் ரிலீசாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனுஷ் வயதான பாத்திரத்தில்
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியான திரைப்படம் அசுரன். 2019 இல் வெளியான இந்தப் படம் வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. தனுஷ் இதுவரை நடித்திராத வயதான பாத்திரத்தில் இதில் நடித்திருக்க இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து தமிழில் அறிமுகமானார். பசுபதி , அம்மு அபிராமி, டிஜே, கென்னி கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தெலுங்கில் ரீமேக்
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற அசுரன் இப்பொழுது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் வெங்கடேஷ் ஹீரோவாக தனுஷ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . பிரியாமணி மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாரப்பா படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ரிலீஸ் தேதி
தமிழைப்போலவே தெலுங்கிலும் நாரப்பா ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்து இருக்க விரைவில் திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் திறப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. பலமுறை ரிலீஸ் தேதியும் முடிவு செய்யப்பட்டு பின் தள்ளி வைக்கப்பட்டது.
Recommended Video

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த நிலையில் நாரப்பா நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீகாந்த் அடலா இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். அசுரன் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தையும் தயாரித்து உள்ளார். மேலும் வெங்கடேசன் த்ரிஷ்யம் 2ம் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











