For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அசுரன் தெலுங்கு ரீமேக் "நாரப்பா" அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியானது!

    |

    ஹைதராபாத் : தமிழில் தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற அசுரன் திரைப்படம் இப்போது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    நடிகர் வெங்கடேஷ் தனுஷின் கதாபாத்திரத்தில் நடித்திருக்க மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்துள்ளார்.

    திரையரங்குகளில் வெளியாக இருந்த இந்தத் திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில் இப்போது அதிகார பூர்வ தேதி வெளியிடப்பட்டுள்ளது.

    தனுஷ், செல்வராகவன் படத்தின் கதை மாற்றம்… காரணம் என்ன தெரியுமா?தனுஷ், செல்வராகவன் படத்தின் கதை மாற்றம்… காரணம் என்ன தெரியுமா?

    தேசிய விருது

    தேசிய விருது

    பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்த திரைப்படம் அசுரன். வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. மேலும் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று தமிழ் சினிமாவிற்கு பெருமையும் சேர்த்துள்ளது.

    ஓடிடியில் வெளியாவது உறுதி

    ஓடிடியில் வெளியாவது உறுதி

    தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அசுரன் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் வெங்கடேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினியாக நடிகை பிரியாமணி நடித்துள்ளார். படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் ஓடிடியில் வெளியாவது உறுதி செய்யப்பட்டிருந்தது.

    இணைந்து தயாரித்துள்ளனர்

    இணைந்து தயாரித்துள்ளனர்

    இயக்குனர் ஸ்ரீகாந்த் அடலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அசுரன் பட தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணுவின் வி க்ரியேஷன் மற்றும் சுரேஷ்பாபுவின் சுரேஷ் புரோடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். மணிஷர்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரகாஷ் ராஜ், முரளி ஷர்மா, கார்த்திக் ரத்தனம், சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

    அமேசான் ப்ரைம்

    அமேசான் ப்ரைம்

    பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் இப்பொழுது நாரப்பா படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 20 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் நாரப்பா வெளியாகிறது. இந்த தகவலை நடிகர் வெங்கடேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். தமிழைப்போலவே தெலுங்கிலும் இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    English summary
    Venkatesh starrer Narappa will be released directly in OTT.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X