»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் "நரசிம்மா" படத்தின் இயக்குநர் திருப்பதிசாமிபலியானார்.

"நரசிம்மா" படத்தின் ரீ-ரிக்கார்டிங் வேலைகளை முடித்துவிட்டு, அதிகாலை 2.30 மணிக்கு, தன்னுடைய சாண்ட்ரோகாரில் கிளம்பினார் திருப்பதிசாமி. காரை அவருடைய டிரைவர் சுந்தரமூர்த்தி ஓட்டி வந்தார். டிரைவருக்கு அருகில்உட்கார்ந்திருந்த திருப்பதிசாமி தூங்கிக் கொண்டிருந்தார்.

கோட்டை அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, டிரைவர் லேசாகக் கண் அயர்ந்து விட்டதால், தாறுமாறாக ஓடியகார், ரோட்டுக்கு ஓரமாக இருந்த மின்சார விளக்குக் கம்பத்தில் மோதி நொறுங்கியது.

இதில் திருப்பதிசாமி உடல் நசுங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவர் அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

கார் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார்.

32 வயதே நிரம்பிய திருப்பதிசாமி சென்னையிலுள்ள வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர். இவருக்கு இன்னும்திருமணம் ஆகவில்லை. எம்.எல். பட்டதாரியான இவர், படிப்பு முடிந்ததும், பத்திரிக்கைத் துறையில் ஈடுபட்டார்.விகடனில் நிருபராகப் பணியாற்றினார்.

அதன் பிறகு, சினிமாவில் நுழைந்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் துணை இயக்குநராக சேர்ந்தார்."அண்ணாமலை", "பாட்ஷா" போன்ற படங்களில் துணை இயக்குநராகப் பணிபுரிந்தார்.

தொடர்ந்து, தெலுங்கில் அடுத்தடுத்து 2 வெற்றிப் படங்களைக் கொடுத்தார். இதைக் கேள்விப்பட்டு அவரைத்தமிழுக்கு வரவழைத்த நடிகர் விஜயகாந்த், தன்னுடைய சொந்தப் படமான "நரசிம்மா"வை இயக்கும் பொறுப்பைஒப்படைத்தார்.

படு சுறுசுறுப்புடன் படத்தை இயக்கினார் திருப்பதிசாமி. முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. ரீ-ரிக்கார்டிங்முடிந்தால், படம் ரெடி என்ற நிலையில்தான் இப்படி ஒரு கோர விபத்துக்கு அவர் பலியாகிவிட்டார்.

திரையுலகில் வெகு வேகமாக வளர்ந்து வந்த ஒரு இயக்குநர் என்று அனைவராலும் புகழப்பட்டவர் திருப்பதிசாமி.திரையுலகத்தைச் சேர்ந்த அனைவரும் இவருடைய மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil