சினிமாவில் தாறுமாறாகப் புழங்கும் போதைப் பொருட்கள்.. பிரபல நடிகர், நடிகைகளை குறிவைக்கும் போலீஸ்!

By

சென்னை: சினிமாவில் போதைப் பொருட்கள் அதிகமாக புழங்குவதை அடுத்து போதைப் பொருள் தடுப்பு போலீசார், நடிகர், நடிகைகள் உள்ளிட்டவர்களை கண்காணித்து வருகின்றனர்.

Recommended Video

எங்க அப்பா வாசிக்க SIMBU ஆட | VJ LOKESH CHAT | FILMIBEAT TAMIL

பாலிவுட்டில் போதைப் பொருட்கள் அதிகமாக புழங்கப்படுவதாக பிரபல நடிகை கங்கனா கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பு புகார் கூறினார்.

'அங்கு பிரபலமான போதைப்பொருள் கொக்கைன். கிட்டத்தட்ட வீடுகளில் நடக்கும் அனைத்து மது விருந்துகளிலும் இது தாராளம் என்று கூறியிருந்தார்.

தமிழகத்தில் நூலகங்கள் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறப்பு.. தமிழக அரசு அனுமதி

போதை மாத்திரை

போதை மாத்திரை

ரத்த பரிசோதனை நடத்தப்பட்டால், அனைத்து டாப் ஹீரோக்களும் கம்பி எண்ணுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெங்களூருவில் போதை மாத்திரை விற்ற அனிகா என்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 145 எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள், பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட 180 எல்.எஸ்.டி. போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அனிகாவுக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாகவும் திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா உள்பட 3 பேரும் போதை மாத்திரைகளை விற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வாங்கி 3 பேரும் விற்பனை செய்திருப்பதும் தெரிய வந்தது.

போலீசார் முடிவு

போலீசார் முடிவு

இவர்கள் 3 பேரும் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும், அதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்தும் உள்ளனர். இதையடுத்து அனிகாவிடம் போதை மாத்திரைகளை வாங்கிய நடிகர்கள், நடிகைகள், இசை அமைப்பாளர்கள் உள்பட கன்னட திரையுலகினரிடம் விசாரணை நடத்த போதைப் பொருள் தடுப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதில் சில முன்னணி நடிகர்களும் இருக்கிறார்களாம்.

நடிகை சார்மி கவுர்

நடிகை சார்மி கவுர்

கடந்த சில வருடங்களுக்கு முன் தெலுங்கு சினிமாவில் போதை பொருள் விவகாரம் பெரிய பிரச்னையானது. நடிகை சார்மி, இயக்குனர் புரி ஜெகநாத் உள்பட பலரிடம் இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. மலையாள சினிமாவிலும் போதை பொருள் தாராளமாக புழங்குவதாக பரபரப்பு புகார் கூறப்பட்டது. இப்போது கன்னட சினிமாவும் இந்தப் பழக்கத்துக்குள் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X