விஜய்யின் ஜன நாயகன்.. அந்த ஹீரோவுக்கு இப்படி ஒரு ரோலா?.. ஹெச்.வினோத் எதை கொடுக்கப்போகிறார்

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்திருக்கிறார் விஜய். இதில் அவருக்கு பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கிறார். மேலும் மமிதா பைஜு, நரேன், பாபி தியோல் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படமானது அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தில் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் நரேன்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புடன் அந்தப் படம் வெளியாகியிருந்தாலும் சுமாரான வரவேற்பை பெற்றது. இதற்கிடையே விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி களமிறங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே முழுநேர அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

கடைசி படம்?: அவர் கட்சி ஆரம்பித்ததாக வெளியிடப்பட்ட அறிவிப்பிலேயே, 'இன்னும் ஒரு படம்தான் நடிப்பேன்' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் சோகமடைந்திருக்கிறார்கள். அந்த கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்குவார் என்றும், கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் என்ற அறிவிப்பும் வெளியானது. அதன்படி படத்துக்கு ஜன நாயகன் என்று வைக்கப்பட்டிருக்கிறது.

Naren says he is playing the role of a scientist in Vijay s Jana Nayagan
Photo Credit:

ஜன நாயகன் டீம்: இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். முதன்முறையாக வினோத் - விஜய் கூட்டணி சேர்ந்திருப்பதால் இப்படம் தரமான சம்பவம் செய்யும் என்ற நம்பிக்கை தளபதி ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. அதேசமயம் இப்படம் அரசியல் படமாக இருக்காது என்பதையும் தெளிவுப்படுத்திவிட்டார் இயக்குநர்.

மமிதா சொன்னது: இதற்கிடையே ஜன நாயகன் படம்தான் கடைசி படம் என திரைத்துறையில் பெரும்பாலும் கூற ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் படத்தில் நடித்திருக்கும் மமிதா பைஜுவோ, 'தேர்தல் முடிவுகளை பொறுத்து சினிமாவில் நடிப்பது குறித்து முடிவு செய்வேன்' என விஜய் கூறியதாக தெரிவித்தார். அவர் அப்படி கூறிய பிறகுதான் விஜய் ரசிகர்கள் மனதில் நிம்மதியே குடி வந்தது. இந்நிலையில் படத்தில் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து நடிகர் நரேன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

நரேன் பேட்டி: சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நான் ஜன நாயகன் படத்தில் ஒரு விஞ்ஞானி ரோலை ஏற்றிருக்கிறேன். அது கெஸ்ட் ரோல்தான். அதேசமயம் படத்தின் கதைக்கு தேவையான, முக்கியமான கதாபாத்திரம்" என கூறியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்களோ என்னது நரேனுக்கு விஞ்ஞானி ரோலா? அப்போ என்ன மாதிரியான கதையை வினோத் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X