பிரபல நடிகையை நான்காவதாக திருமணம் செய்யும் நடிகர்..லிப் லாக் கொடுத்து செம ரொமான்ஸ்!

சென்னை : தெலுங்கு நடிகரும் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ் நான்காவதாக நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நரேஷ் இவர் தமிழில் நெஞ்சத்தை அள்ளித்தா, பொருத்தம், மாலினி 22 பாளையங்கோட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்து விவாகரத்தான நிலையில் மீண்டும் ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளது.

நடிகர் நரேஷ்

நடிகர் நரேஷ்

நடிகர் நரேஷ் மற்றும் நடிகை பவித்ரா லோகேஷ் கடந்த சில மாதங்களாகவே உறவில் இருந்துள்ளனர்.இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓட்டல் அறையில் இருந்த போது நடிகர் நரேஷின் மனைவி ரம்யா ரகுபதி, ஓட்டலுக்குள் அதிரடியாக புகுந்து இருவரையும் கையும் களவுமாக பிடித்து மீடியாக்கள் முன் செருப்பால் அடித்து அசிங்கப்படுத்தினார்.

லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில்

லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில்

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நரேஷ் ரம்யாவுக்கு முறைப்படி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதன் பின் நரேஷ் மற்றும் பவித்ரா இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். கடந்த ஆண்டு கிருஷ்ணாவின் பிறந்த நாள் விழாவிலும், பவித்ரா குடும்பத்தில் ஒருவராக கலந்து கொண்டார்.

லிப் லாக் கொடுத்து திருமண அறிவிப்பு

லிப் லாக் கொடுத்து திருமண அறிவிப்பு

இந்நிலையில், நடிகர் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர். புத்தாண்டையொட்டி அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், புதிய ஆண்டு...புதிய தொடக்கம்...உங்களின் வாழ்த்துக்கள் தேவை என்ற கேப்ஷனுடன், கேன்டில் லைட்டில் ஒருவருக்கு ஒருவர் உதட்டில் முத்தம் கொடுத்துக்கொண்டு தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

யார் இந்த பவித்ரா லோகேஷ்?

யார் இந்த பவித்ரா லோகேஷ்?

கன்னட நடிகையான பவித்ரா 16 வயதில் திரையில் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார்.இவர், கன்னடம், தெலுங்கு படங்களிலும் தமிழில் கௌரவம், அயோக்யா, க/பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சர்க்காரு வாரி பாடா படத்தில் மகேஷ் பாபுவின் அம்மாவாக நடித்துள்ளார்.

இரண்டுமுறை விவாகரத்து

இரண்டுமுறை விவாகரத்து

அம்மா, அக்கா என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கனகச்சிதமாக செய்து அசத்துவார் பவித்ரா, பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் மென் பொறியாளரான முதல் கணவரை விவாகரத்து செய்தார். அதன் சுசேந்திர பிரசாத்துடன் உறவில் இருந்து பின் அவரை திருமணம் செய்து கொண்ட பவித்ரா அவரை 2018ம் ஆண்டு பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: naresh நரேஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X