Malli Pelli: இது 4வது கல்யாணம் பண்ண நரேஷின் நிஜ கதையா? வனிதா விஜயகுமாருக்கு என்ன ரோல் தெரியுமா?

சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் நரேஷ் மற்றும் தெலுங்கு நடிகை பவித்ரா இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் நரேஷ் 4வதாக நடிகை பவித்ராவை தனது 60வது வயதில் காதலித்து திருமணம் செய்துக் கொண்டது ஏகப்பட்ட ட்ரோல்களுக்கும் வழி வகுத்தது. இந்நிலையில், இருவரும் இணைந்து வயதான நிலையிலும் நடிகர்களுக்கு காதல் வரும் அவர்கள் விருப்பப்பட்டால் எதுவும் தடை இல்லை என்கிற கதையை கொண்ட மல்லி பெல்லி படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது.

Naresh - Pavitra starrer Malli Pelli scene shared by Vanitha Vijayakumar for this reason

இந்நிலையில், இந்த படத்தில் நரேஷ் உடன் இணைந்து நடித்துள்ள வனிதா விஜயகுமார் தியேட்டரில் தனது சீனுக்கு கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ் வீடியோவை ஷேர் செய்துள்ளார். அப்படி அவர் என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

4வது கல்யாணம் பண்ண நரேஷ்:

பிரபல தெலுங்கு நடிகர் நரேஷ் சமீபத்தில் நடிகை பவித்ராவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். புத்தாண்டு அன்றே இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியான போதே இருவரும் காதலிக்கிறார்களா? என கேள்விகள் கிளம்பின. உடனடியாக திருமணத்தையும் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.

இந்நிலையில், நரேஷ் மற்றும் பவித்ரா இணைந்து நடித்துள்ள மல்லி பெல்லி திரைப்படம் இந்த வாரம் தியேட்டரில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

நரேஷின் நிஜக் கதையா?:

மல்லி பெல்லி படத்தின் கதை என்னவென்றால் பிரபல நடிகருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தும் சரியான திருமண வாழ்க்கை அமையாததால் மன நிம்மதியே இல்லை.

முதல் மனைவி பிரிந்து சென்று விட பவித்ராவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டு வயதான காலத்திலும் காதலுடன் சந்தோஷமாக வாழ்வது தான் கதை. இந்த கதை உங்களுடைய நிஜ வாழ்க்கையா என நரேஷ் மற்றும் பவித்ராவிடமே பத்திரிகையாளர்கள் கேட்ட நிலையில், அதை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டனர்.

அந்த நடிகர் 4வதாக பவித்ராவை படத்தில் திருமணம் செய்திருந்தால் தான் இந்த படம் அவருடையாக கதையாக இருக்கும் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Naresh - Pavitra starrer Malli Pelli scene shared by Vanitha Vijayakumar for this reason

வனிதா விஜயகுமார் தான் முதல் மனைவி:

இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை வீடியோ க்ளிப்பாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் வனிதா விஜயகுமார்.

நடிகர் நரேஷுக்கு முதல் மனைவியாக இந்த படத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார் இருவரும் பேசிக் கொள்ளும் அந்த காட்சியில், நாம் இருவருமே அடல்ட், நம் வாழ்க்கையை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என வனிதா சொல்ல, நரேஷ் மெழுகுவர்த்தியை அணைக்கும் காட்சியைத் தான் வனிதா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

வனிதாவின் இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் ரொம்ப சூப்பராக இருக்கிறது என்றும் உங்கள் நடிப்பு வேறலெவல் என்றும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவுக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், சில படங்கள் ரிலீஸ் ஆகியும் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றுத் தருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X