நோய் எதிர்ப்பு சக்தியை அப்படி அதிகரிக்குமாம்ல.. வைரலாகும் பிரபல நடிகையின் களிமண் குளியல் ஸ்டில்ஸ்!
மும்பை: பிரபல நடிகையின் களிமண் குளியல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Recommended Video
அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடலான நர்கிஸ் பக்ரி (Nargis Fakhri), இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இம்தியாஸ் அலி இயக்கத்தில், ரன்பீர் கபூர் நடித்த 'ராக் ஸ்டார்' படம் மூலம் இந்தியில் அறிமுகமானார் நர்கிஸ்.

தமிழில் சாகசம்
இதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்தன. ஜான் ஆபிரஹாமின் மெட்ராஸ் கபே, டேவிட் தாவனின், மேய்ன் தேரா ஹீரோ, ஹவுஸ்புல் 3, அசார் உட்பட பல படங்களில் நடித்தார். ஸ்பை என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்த நர்கிஸ், தமிழில் பிரஷாந்த் நடித்த சாகசம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இப்போது டோர்பாஸ் என்ற இந்திப் படத்தில் நடித்திருக்கிறார்.

அமெரிக்க இயக்குனர்
லாக்டவுனுக்குப் பிறகு இந்தப் படம் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. இவர் பிரபல இந்தி நடிகர் உதய் சோப்ராவை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், 2017 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர். இதையடுத்து பிரபல அமெரிக்க இயக்குனர் மாட் அலோன்ஸோ (Matt Alonzo) என்பவரை காதலித்து வருகிறார் நர்கிஸ்.

கலிபோர்னியா
கொரோனா லாக்டவுன் காரணமாக, தற்போது கலிபோர்னியாவில் இருக்கும் நடிகை நர்கிஸ் பக்ஃரி, அங்குள்ள ஸ்பா ஒன்றில் களிமண் குளியலில் ஈடுபட்டுள்ளார். அதிகரிக்கும் உடல் சூடு மற்றும் தோல் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வு என்று இந்த மண் குளியலை பலர் விரும்புகிறார்கள். பல்வேறு பகுதிகளில் இந்த மண் குளியல் செம பிசினஸ். உடல் முழுவதும் மண்ணைப் பூசி, வெயிலில் சில நிமிடங்கள் காய வைப்பதுதான் இந்தக் குளியல்.

நோய் எதிர்ப்பு சக்தி
இந்த களிமண் குளியலை கலக்கலாக செய்துள்ள நடிகை நர்கிஸ், அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், உடல் மற்றும் சருமத்தின் நச்சுத்தன்மையை நீக்கி புத்துணர்ச்சியை கொடுக்க இந்த குளியல் சிறந்தது. வைட்டமின் டி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் இந்த குளியல் பெஸ்ட் என்று சில சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் நர்கிஸ்.

குண்டாயிட்டீங்களே?
இதை லட்சக்கணக்கானோர் லைக்ஸ் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சிலர் இதற்கு ஜாலியான கமென்ட்களையும் தெரிவித்துள்ளனர். ஒருவர், இப்ப உங்களை பார்த்தா சாக்லேட் மாதிரி இருக்கீங்க?' என்று தெரிவித்துள்ளார். இன்னொரு நெட்டிசன், குண்டாயிட் டீங்களே? என்று கவலைப்பட்டிருக்கிறார்.

மோசமான தேர்வு
'கொஞ்சம்தான். ஆனால். 28 பவுண்ட் குறைந்திருக்கிறேன்' என்று பதிலளித்திருக்கிறார் நர்கிஸ். பயங்கர உயரமா இருக்கீங்க.. உங்க உயரம் என்ன? என்று ஒரு ரசிகர் கேட்க, ஐந்தடி 9 இஞ்ச் என்று பதிலளித்திருக்கிறார். இன்னொருவர், உங்கள் பக்கத்தில் இருப்பவர் உங்கள் பாய்பிரண்ட் என்றால், அது மோசமான தேர்வு என்று கூற, அதற்கு, 'அவர் பாய்பிரண்ட் இல்லை, பிரண்ட்' என்று சளைக்காமல் பதிலளித்திருக்கிறார், நர்கிஸ்.


Click it and Unblock the Notifications











