பிரமாண்ட அரங்கில், 150 நடன கலைஞர்களுடன் பிரசாந்த்-நர்கீஸ் ஃபக்ரி நடனம்!

By Shankar

சென்னை: சாகசம் படத்துக்காக பிரசாந்த் - நர்கீஸ் ஃபக்ரி 150 நடனக் கலைஞர்களுடன் ஆடிய நடனக் காட்சி சென்னை அருகே படமாக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் 'சாகஸம்'. இப்படத்தை தியாகராஜன் ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். அருண் ராஜ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் பிரசாந்துடன் நாசர், துளசி, தேவதர்ஷினி, லீமா, தம்பி ராமைய்யா, எம்.எஸ்.பாஸ்கர், அபிசரவணன், ஜான்விஜய், ஆகியோருடன் சோனுசூட், கோட்டா சீனிவாசராவ், ராவ்ரமேஷ், பெசன்ட்நகர் ரவி என ஒரு வில்லன் பட்டாளமே மோதுகிறார்கள்.

நர்கீஸ் ஃபக்ரி

நர்கீஸ் ஃபக்ரி

இப்படத்தில் பிரசாந்துடன் இணைந்து நடனமாடுகிறார் இந்தி பட நாயகி நர்கீஸ் ஃபக்ரி. இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்திருப்பவர் ராஜூ சுந்தரம்.

150 நடனக் கலைஞர்கள்

150 நடனக் கலைஞர்கள்

50 ரஷ்ய அழகிகளுடனும் 100 ஆண் நடன கலைஞர்களுடன் பிரசாந்தும் நர்கீஸும் இந்தப் பாடலில் ஆடுகின்றனர்.

காரத்தில் சில்லி இவ...

காரத்தில் சில்லி இவ...

தமன் இசையில், கார்க்கி எழுதிய ‘காரத்தில் காரத்தில் சில்லி இவ...' எனும் பாடல் இதுவரை தமிழ் சினிமா சரித்திரத்தில் எடுக்கப்படாத புதுவிதமாக அமையும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

பிரமாண்ட அரங்கம்

பிரமாண்ட அரங்கம்

இந்தப் பாடலுக்காக சென்னை அருகே உள்ள பின்னி மில்லில் பிரமாண்ட அரங்கை நிர்மாணித்துள்ளார் கலை இயக்குநர் மிலன்.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

பாடல் காட்சி முடிந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தனர் பிரசாந்தும் நர்கீஸும். 'தமிழில் எனக்கு நல்ல வாய்ப்புகள் வேண்டும் என காத்திருந்தேன். இந்தப் படத்தில் பிரசாந்துடன் ஆடுவது மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X