எந்த தியேட்டர்ல துரத்துனாங்களோ.. அதே தியேட்டர்ல நரிக்குறவர்களை லால் சலாம் பார்க்க வைத்த ரஜினிகாந்த்!

சென்னை: "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்கோ" என எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நரிக்குறவர்கள் போல வேடமிட்டு நடனமாடி பழங்குடியின மக்களை பெருமைப்படுத்திய இதே தமிழ் சினிமாவில் சிம்புவின் 'பத்து தல' படத்தை பார்க்க வந்த நரிக்குறவ மக்களை தடுத்து வெளியேற சொன்னது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ரோகிணி தியேட்டருக்கு எதிராக ஹாஷ்டேக் டிரெண்டாகி அந்த வீடியோக்கள் வெளியான அடுத்த நிமிடமே அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு படத்தை பார்க்க வைத்தனர். இந்நிலையில், அதே தியேட்டரில் தற்போது லால் சலாம் படத்தை நரிக்குறவ மக்கள் குடும்பத்துடன் கூட்டமாக வந்து படத்தை பார்க்க டிக்கெட்டுகளை தலைவர் ரஜினி கொடுத்துருக்காரு என அந்த மக்கள் சொல்லும் காட்சிகள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

Nari Kuravargal watched Lal Salaam at Rohini theater, they told Rajinikanth gave tickets

பாட்ஷா முதல் லால் சலாம் வரை: ரஜினிகாந்தின் படங்களை சிறு வயது முதலே பார்த்து வருகிறோம். பாட்ஷா புடிக்கும், படையப்பா புடிக்கும், இப்போ இந்த லால் சலாம் படத்தை பார்க்க வந்திருக்கோம். ரஜினிகாந்த் பொண்ணு இயக்கியிருக்காங்க, ரொம்ப சந்தோஷம் எப்பவுமே எங்க தலைவரை பார்க்க புடிக்கும். இந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்திருக்கோம் என அந்த பெண்மணி புன்னகையுடன் சொல்வது இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

தளபதி கொடுத்த டிக்கெட்: தளபதி படத்தில் இருந்து ரஜினிகாந்தை பார்த்து வரும் மக்கள் எங்கள் தலைவர் கொடுத்த டிக்கெட், தளபதி டிக்கெட் கொடுத்தாரு என சந்தோஷத்தை வெளிப்படுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்தை ரோகிணி தியேட்டரில் பார்த்து ரசித்தனர். ரஜினிகாந்த் சார்பாக அவரது ரசிகர்கள் டிக்கெட்டுகளை இலவசமாக கொடுத்துள்ளனர்.

Nari Kuravargal watched Lal Salaam at Rohini theater, they told Rajinikanth gave tickets

உரிய மரியாதை: முன்னதாக 'பத்து தல' படத்தின் போது நடந்தது போல எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட்டுகளை காட்டிவிட்டு ஜம்முன்னு தியேட்டருக்கு சென்று மொய்தீன் பாயை கண்டு ரசித்துள்ளனர். சாதி, மதம், உயர்வு, தாழ்வு, பணக்காரன், ஏழை என்கிற பிரிவு மனுஷனுக்கு இருக்கக் கூடாது என்கிற நல்ல கருத்தை விதைக்கும் இந்த படத்தை அனைவரும் தியேட்டருக்கு சென்று இந்த வாரம் பார்ப்பார்கள் எண்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்கப் ஆகும்: ஓபனிங் பெரிதாக இல்லை என்றாலும், வீக்கெண்ட் லால் சலாம் நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிக்கப் ஆகும் என்றே தெரிகிறது. பாசிட்டிவான விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்து வருவதே பெரிய பலம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X