அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண 15 லட்சம்.. அந்த டைரக்டர் கை வச்சிட்டாரு.. நரிக்கூட்டம் ஜனனி ஷாக் பேட்டி!

சென்னை: 'நரிக்கூட்டம்' ஜனனி தன்னிடம் தவறாக நடந்த இயக்குநர் பற்றியும் சினிமாவில் நடிக்க அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொன்னாங்க என்பது குறித்தும் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நரிக்கூட்டம் யூடியூப் சேனலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜனனி. சீரியல், சினிமா என்று அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தனக்கு நேர்ந்த காஸ்டிங் கவுச் மற்றும் பாடி ஷேமிங் உள்ளிட்ட விஷயங்களை பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியாக அளித்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

நரிக்கூட்டம் ஜனனி

நரிக்கூட்டம் ஜனனி

பிளாக்‌ஷீப், நக்கலைட்ஸ் யூடியூப் சேனல்களை போல நரிக்கூட்டம் யூடியூப் சேனலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. அதில், லீடு ரோலில் நடித்து வந்த ஜனனி சினிமா வாய்ப்புகளால் தனக்கு நேர்ந்த சிக்கல்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். இளம் நடிகைகள் மற்றும் வளரும் நடிகைகள் சந்திக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையில் இவரும் சிக்கி உள்ளாராம்.

இரண்டு அட்ஜெஸ்ட்மென்ட்

இரண்டு அட்ஜெஸ்ட்மென்ட்

ஒரு படத்தில் நடிக்க தான் செலக்ட் ஆகி விட்டதாகவும், எல்லா புரொசிஜரும் முடிந்து கடைசியாக நீங்க தான் இந்த ரோல் பண்றீங்க.. ஆனால், ஒரு ரெண்டு அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கும் உங்களுக்கு ஓகேவான்னு கேட்டாங்க, ஒரு செகண்ட் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஒன்னுமே வேண்டாம்னு நோ சொல்லிட்டேன். தயாரிப்பாளர், இயக்குநர் அல்லது ஹீரோவுடன் படுக்கணும்னு கேட்டாங்க என பகிர் கிளப்பி உள்ளார்.

15 லட்சம் வரை பேரம்

15 லட்சம் வரை பேரம்

வேண்டாம்னு சொல்லியும் அவங்க விடல, அடுத்ததாக 3 லட்சம், 5 லட்சம், 8 லட்சம், 10 லட்சம்னு 15 லட்சம் வரை அதுக்கு ஒத்துக்க என்னிடம் பேரம் பேசினாங்க, நான் முடியவே முடியாதுன்னு சொல்லி மறுத்ததும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போயிடுச்சு, இதில் வேடிக்கை என்னன்னா உங்க தோழிகளை யாராவது ரெஃபர் பண்ண சொல்லுங்கன்னு சொன்னது தான். நானே வரமாட்டேன்னு சொல்றேன், என் பிரெண்ட்ஸ அனுப்புவேனான்னு பேசி உள்ளார்.

மேல கை வச்சிட்டாரு

மேல கை வச்சிட்டாரு

ஒரு படத்தில் ஓகேவாகி நடித்து வந்தேன். 4 நாள் ஷூட் முடிந்து ஒரு ரூமில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் இயக்குநர் வந்து என் ஷோல்டர் மேல கை வச்சிட்டாரு, அந்த படத்தில் ஹீரோவாக என் ஃபிரெண்ட் தான் நடித்தார். அவர் சொல்லித்தான் நான் போனேன், உடனே அவனுக்கு போன் போட்டு ஒரே பிரச்சனையாகிடுச்சு, அதுக்கு அப்புறம் அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை என்றார்.

அதுதான் பிடிக்காது

அதுதான் பிடிக்காது

அட்ஜெஸ்ட்மென்ட்டை விட எனக்கு சினிமா ஆடிஷன்ல பிடிக்காத ஒரு விஷயம் பாடி ஷேமிங் தான். மூஞ்சி மெச்சூராக இருக்குன்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணுவாங்க, இல்லைன்னா ரொம்ப ஒல்லியா இருக்கன்னு சொல்லுவாங்க, இதுக்காக வெயிட் கெயினிங் டேப்ளட்லாம் போட்டுருக்கேன் என நரிக்கூட்டம் ஜனனி ஏகப்பட்ட அதிர்ச்சிகளை அடுக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X