Garudan movie: சூரியின் கருடன் படம் பார்க்க சென்ற நரிக்குறவர்கள்.. திரையரங்கில் அனுமதிக்க மறுப்பு!
சென்னை: நடிகர் சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி, ஷிவதா, ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியாகி உள்ளது கருடன் படம். கடந்த ஆண்டில் சூரியின் விடுதலை படம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான சூழலில் அந்த படத்தில் சூரி நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை சூரிக்கு பெற்றுத் தந்தது.
இதையடுத்து தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்திலேயே விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார் சூரி. இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் வெளியாகி உள்ள கருடன் படத்தில் அவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மீண்டும் நாயகனாக சூரி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் சூரி: நடிகர் சூரி காமெடியனாக தன்னுடைய கேரியரை துவங்கினாலும் தற்போது அவர் அடுத்தடுத்து நாயகனாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து வெளியான விடுதலை படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்திருந்தார் சூரி. இந்த கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நாயகனாகவே படங்களில் நடித்து வருகிறார் சூரி. தற்போது அவரது நடிப்பில் ஹீரோவாக வெளியாகியுள்ளது கருடன் படம்.
கருடன் படம்: கருடன் படம் தற்போது ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் சூரியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது. படத்தில் சூரி, சசிக்குமார். உன்னி முகுந்தன், சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகமெங்கும் இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் கடலூரில் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்க்க முற்பட்ட நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வு வெளியாகியுள்ளது.
நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் காலையிலிருந்து சாப்பிடாமல் தாங்கள் கருடன் படத்தை பார்ப்பதற்காக காத்திருந்த சூழலில் தங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று தியேட்டர் நிர்வாகம் உறுதியாக கூறிவிட்டதாக நரிக்குறவ மக்கள் தங்களது வேதனைகளை பதிவிட்டுள்ளனர். இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் கவர்ந்து விமர்சனங்களையும் பெற்று வருகிறது. தாங்கள் மக்கள் இல்லையா என்ற அவர்களது கேள்வி அனைத்து தரப்பினருக்கும் வேதனையை கொடுத்துள்ளது.
படம் பார்த்த நரிக்குறவர்கள்: கடலூரின் நியூ சினிமா திரையரங்கிற்கு 20க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் சென்ற நிலையில், அவர்களின் உடையை காரணம் காட்டி, உள்ளே அனுமதிக்க திரையரங்க நிர்வாகிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதுகுறித்த தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள நரிக்குறவ மக்கள், கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததுடன், கோட்டாட்சியரிடமும் மனு கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களை அரசு வாகனத்திலேயே திரையரங்கிற்கு அழைத்து சென்ற வட்டாட்சியர், அவர்களை உள்ளே அனுமதிக்க அறிவுறுத்திய நிலையில், அவர்கள் திரையரங்கிற்குள் சென்று படத்தை பார்க்க திரையரங்க நிர்வாகம் அனுமதி வழங்கியது.


Click it and Unblock the Notifications











