நெஞ்சமுண்டு நேர்மையுண்டு.. அமீரின் 'நாற்காலி'யில் எம்ஜிஆர் புகழ்பாடும் பாடல்.. முதல்வர் வெளியிட்டார்

By

சென்னை: அமீரின் நாற்காலி படத்தில் இடம்பெற்றுள்ள எம்.ஜி.ஆர் புகழ் பாடும் பாடலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

சூர்யா நடித்த, மெளனம் பேசியதே படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அமீர்.

Recommended Video

சென்னை: ‘நாற்காலி’ படத்தின் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு பாடல்... வெளியிட்ட தமிழக முதல்வர்..!

அடுத்து ஜீவா நடித்த ராம், கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன், ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் உட்பட படங்களை இயக்கினார்.

அரசியல் நாற்காலி

அரசியல் நாற்காலி

பின்னர் சுப்ரமணிய சிவா இயக்கிய, யோகி படத்தில் ஹீரோவாக நடித்தார். அடுத்து, சில படங்களில் நடித்த அமீர், கடைசியாக வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதி

அரசியல்வாதி

இதில் அரசியல்வாதி வேடத்தில் அமீர் நடிக்கிறார். படத்தை வி.இஸட்.துரை இயக்குகிறார். இவர், அஜித் நடித்த முகவரி, விக்ரம் நடித்த காதல் சடுகுடு, ஷாம் நடித்த 6 மெழுகு வர்த்திகள், சுந்தர்.சி நடித்த இருட்டு உட்பட சில படங்களை இயக்கியவர். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அஜயன் பாலா வசனம் எழுதுகிறார்.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு

இந்தப் படத்தை, மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கிறார். இதில் அமீர் ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். இவர் வில் அம்பு, நையப்புடை, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வணங்காமுடி உட்பட பல படங்களில் நடித்தவர். வித்யா சாகர் இசை அமைக்கும் இந்த அரசியல் படத்தில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற பாடல் இடம்பெறுகிறது.

வள்ளலுக்கு வச்ச பெயர்

வள்ளலுக்கு வச்ச பெயர்

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் இந்தப் பாடலை, பா. விஜய் எழுதியுள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு, அந்த வள்ளலுக்கு வச்ச பெயர் வாத்தியாரு' என்று இந்தப் பாடல் தொடங்குகிறது.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். எளிய முறையில் நடந்த இந்த விழாவில், அதை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X