சாகசம் படத்தில் பிரசாந்த்துடன் ஆட்டம் போடும் நர்கீஸ் பக்கிர்!

By Shankar

பிரசாந்த் நடிக்கும் சாகசம் படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் நடிக்கிறார் நர்கீஸ் பக்கிர்.

மம்பட்டியான், பொன்னர் சங்கர் படங்களுக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் மெகா பட்ஜெட் படம் சாகசம்.

இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்ற மாதம் தொடங்கி டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

பிரசாந்த்

பிரசாந்த்

இந்தப் படத்தில் வேலை தேடும் ஒரு இளைஞராக பிரசாந்த் நடிக்கிறார். பிரசாந்துக்கு அப்பாவாக நாசரும், அம்மாவாக துளசியும், தங்கையாக லீமாவும், மற்றும் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, மலேசியா அபிதா, சுவாமிநாதன், சோனு சூட், கோட்டா சீனிவாசராவ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

முன்னணி நாயகி

முன்னணி நாயகி

ஒரு முன்னணி நாயகியுடன் பேசி வருகிறார்கள். அவர்தான் பிரசாந்த் ஜோடி.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்பெயின், அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

நர்கீஸ் பக்கிர்

நர்கீஸ் பக்கிர்

அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் பிரபல இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி, பிரசாந்துடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார். இவர் இந்தியில் ரன்பீர் கபூர், ஜான் ஆபிரகாம், ஷாகித் கபூர் ஆகியோருடன் ஹிட் படங்களில் நடித்தவர். இவர்கள் இருவரும் இணைந்து ஆடும் பாடல் காட்சியை பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கவுள்ளனர்.

புது இயக்குநர்

புது இயக்குநர்

இந்த படத்தின் கதை, திரைக்கதையை திருவிக்ரம் எழுத அருண்ராஜ் வர்மா இயக்குகிறார். இவர் இயக்குனர் மேஜர் ரவியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்துள்ளார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தியாகராஜன்

தியாகராஜன்

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X