நான் நடிக்கல.. அதனால சொல்றேன்.. படம் 100 நாள் ஓடும்னு.. செம கலாய் செம கலாய்!
சென்னை : நறுவி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் டிவி புகழ் முல்லை காமெடியாக பேசி அசத்தினார்.
நறுவி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கோதண்டம். இவர் முல்லையுடன் இணைந்து விஜய் டிவியின் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் சிறந்த நகைச்சுவையை செய்து அசத்தியவர்.

முல்லை கோதண்டம் என்று தான் பலரும் அழைப்பது வழக்கம். முல்லை-கோதண்டம் எந்த நிகழ்ச்சியில் மேடை ஏறினாலும் அரங்கமே அதிரும் அந்த அளவிற்கு சிரிக்க வைத்து விடுவார்கள். இதனால் நறுவி படத்தில் முல்லை நடிக்கவில்லை என்றாலும் இருவரும் இணைந்து தான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய கோதண்டம் நறுவி படத்தின் தயாரிப்பாளரை கண்டு வியந்து போனேன். தன் மகனுக்காக சொத்துகளை விற்று படத்தை தயாரித்திருக்கும் அப்பாவை முதன்முதலில் பார்க்கிறேன் என்று கூறினார் .

மேலும் படத்தில் கோதண்டம் ஒரு காட்சியில் சிங்கில் டேக்கில் நடித்திருப்பதாக கூறினார். படப்பிடிப்பு மாலை 6 மணியளவில் முடியவேண்டிய நிலையில் 3 நிமிடத்தில் ஒரு காட்சி எடுக்க நேரிட்டதாகவும் அதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சரியாக நடித்திருந்தேன் என்று கூறினார் .
இந்த படத்தில் முல்லை நடிக்காமல் போனது மிகவும் வருத்தம் என்று கோதண்டம் தெரிவித்தார். மேலும் பலருக்கு இன்று வரை யார் கோதண்டம் யார் முல்லை என்று தெரியாமல் குழம்பி விடுகிறார்கள் என்று கூறினார் .

மேலும் நிகழ்வில் பேசிய முல்லை ஒரு படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு அழைத்து எனக்கு பரிசு கொடுத்தனர். அப்போது நான் இந்த படத்தில் நடிக்கவே இல்லை எனக்கு எதுக்கு விருது என்று கேட்டதற்கு நீங்கள் நடிக்காததால் தான் படம் நூறு நாள் ஓடியது என்றனர். இதனால் நான் நடிக்காத நறுவி படமும் நூறு நாள் ஓடும் என்று முல்லை காமெடியாக கூறினார்.

இந்த படத்தில் நான் நடிப்பதற்காக இயக்குனர் நீண்ட நாட்களாக காத்திருந்ததாகவும் பல நாட்கள் நாங்கள் பல படங்களில் நடித்து வந்ததால் இந்த படத்தில் நடிப்பது தள்ளி போனது. இருந்தும் இறுதியாக நடித்து விட்டோம் என்று கூறினார். சிறிய பட்ஜெட் படம் என்பதால் நீங்கள் தான் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் .


Click it and Unblock the Notifications











