நாசா கொடுத்த பரிசு.. நட்சத்திரத்துக்குப் பிரபல நடிகையின் பெயர்.. எக்கச்சக்க மகிழ்ச்சியில் ஹீரோயின்!

By

சென்னை: பிரபல தமிழ் நடிகையின் பெயரை 'நாசா', நட்சத்திரம் ஒன்றுக்குச் சூட்டியுள்ளது.

Recommended Video

Actress Rithika doing household chores | Sameera reddy, Harathi, Jackline, Hansika

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி. தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்துள்ளார்.

அவருக்கு நேற்று 29 வது பிறந்தநாள். அவரது பிறந்த நாளுக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு ஒன்று கிடைத்திருக்கிறது.

ஒரு கல் ஒரு கண்ணாடி

ஒரு கல் ஒரு கண்ணாடி

குழந்தை நட்சத்திரமாக, இந்தியில் நடித்து வந்தவர் ஹன்சிகா. பின்னர் தேசமுத்ருடு என்ற தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனார். தனுஷின் 'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யின் வேலாயுதம், உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, சிம்புவின் வாலு, ஜெயம் ரவியின் போகன் உட்பட பல படங்களில் நடித்தார்.

சிம்பு - ஹன்சிகா

சிம்பு - ஹன்சிகா

இப்போது, மஹா படத்தில் நடித்து வருகிறார். இதை அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்குகிறார். இவர், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இயக்குனர் லஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தில் சிம்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். காதல் முறிவுக்குப் பிறகு சிம்பு - ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் இது என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

நட்சத்திரம்

நட்சத்திரம்

இதில், ஶ்ரீகாந்த், சாயாசிங், தம்பி ராமையா, நாசர், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு நேற்று பிறந்த நாள். இதையடுத்து மஹா படக்குழு புதிய போஸ்டரை நேற்று வெளியிட்டிருந்தது. வித்தியாசமாக இருந்த இந்த போஸ்டர் நேற்று வைரலானது. இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் பெயரை நட்சத்திரம் ஒன்றுக்கு நாசா சூட்டியுள்ளது.

கூகுள் பரிந்துரை

கூகுள் பரிந்துரை

இதையடுத்து நடிகை ஹன்சிகா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, 'புகழ்பெற்ற ஒருவரை கூகுள் தொடர்பு கொண்டு இந்தப் பெருமையை பெற்றுத்தருவது வழக்கம். நான் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, சினிமாவில் நடித்து வருகிறேன். இதனால் கூகுள் நட்சத்திரம் ஒன்றுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக எனது பெயரை நாசாவுக்குப் பரிந்துரை செய்தது.

முதல் நடிகை

முதல் நடிகை

விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு செய்து, என் பெயரை ஒரு நட்சத்திரத்துக்கு வைத்துள்ளனர். இந்திய நடிகைகளில் இந்த பெருமையை பெற்ற முதல் நடிகை நான் தான். என் பிறந்த நாளுக்கு இதைவிட வேறு என்ன, சிறந்த பரிசாக இருக்க முடியும்? என்று கூறியுள்ளார் ஹன்சிகா. இதையடுத்து ரசிகர்களும் நடிகர், நடிகைகளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X