»   »  ரூ. 50 லட்சம் மோசடி: சத்யராஜ் நண்பர் மீது நாசர் புகார்

ரூ. 50 லட்சம் மோசடி: சத்யராஜ் நண்பர் மீது நாசர் புகார்

Subscribe to Oneindia Tamil

தன்னிடம் ரூ 50 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டதாகநடிகர் சத்யராஜின் முன்னாள் மேலாளரும், நெருங்கிய நண்பருமான தயாரிப்பாளர்ராமநாதன் மீது நடிகர் நாசரும், அவரது மனைவி கமீலாவும் சென்னை போலீஸில்புகார் கொடுத்துள்ளனர்.

சத்யராஜை வைத்து பிரம்மா, நடிகன், வள்ளல் உள்ளிட்ட பல்வேறு படங்களைத்தயாரித்தவர் ராமநிாதன். நடிகர் சத்யராஜின் நெருங்கிய நண்பரான ராமநாதன், பலஆண்டுகளாக சத்யராஜின் மேலாளராக இருந்து வந்தார்.

ராமநாதன் தமிழில் மீண்டும் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக தனக்குபைனான்சியர் யாரிடமாவது பணம் வாங்கித் தருமாறு நாசரை அணுகினார்.

இதையடுத்து பைனான்சியர் பிரகாஷ் பொகாடியாவிடம் நாசரும், அவரது மனைவிகமீலாவும் ரூ. 50 லட்சம் பணத்தை வாங்கி ராமநாதனிடம் கொடுத்தனர்.

பணத்தை வாங்கிய ராமநாதன் படத் தயாரிப்பைத் தொடங்கவில்லை. மேலும்,பணத்துக்கான வட்டியையும் கொடுக்காமல் இருந்துள்ளார்.


இதுகுறித்து நாசர் கேட்டபோது சரியான பதில் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் பைனான்சியர் தரப்பிலிருந்து நாசருக்கு தொல்லை ஆரம்பித்துள்ளது.இதையடுத்து நாசரும், அவரது மனைவி கமீலாவும் இன்று சென்னை மாநகரகாவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ராமநாதன் மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பதிவு செய்த போலீஸார் ராமநாதனை விசாரணைக்கு அழைத்தனர். அவரும்மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் முன் ஆஜராகி விளக்கம் தந்தார்.

இச் சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil