18 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகர்
நடிகர் நசீருதீன் ஷா மீண்டும் தமிழுக்கு வருகிறாராம்.
சென்னை: பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷா மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.
வித்யூத் ஜாம்வல், நவாஸுதின் சித்திக்கி என வில்லன் நடிகர்களை மும்பையிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். கதாநாயகிகள் மும்பையிலிருந்து இறக்குமதியானது போல இப்போது வில்லன்களை இறக்குமதி செய்கிறார்கள் தமிழ் இயக்குனர்கள்.

இப்போது பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷா 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் கமல்ஹாசனின் புகழ்பெற்ற ஹேராம் திரைப்படத்தில் மகாத்மா காந்தியாக நடித்தவர். இயக்குனர் பிரகாஷ் தேவராஜ், மும்பையில் உள்ள நசீருதீன் ஷாவை சந்தித்துள்ளார்.
பிரகாஷ் தேவராஜ் சொன்ன கதை நசீருதீனுக்கு பிடித்துவிட்டதாகவும், அதனால் விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications