நமக்கெல்லாம் நஸ்ரியாதான் செல்லம்.. அப்ப நஸ்ரியாவோட செல்லம் யாரு.. அதுக்கு பொறந்த நாளு!

சென்னை: நடிகை நஸ்ரியா நடிப்பை விட்டுப் போனாலும் கூட இன்னும் அவரது நினைவுகளுடன் சுற்றி வருபவர்கள் நிறைய நிறைய உள்ளனர். அப்படி ஒரு செல்லம் அவர். ஆனால் அவருக்கே ஒரு செல்லம் இருக்கு அதுக்கு இன்னிக்குப் பிறந்த நாளாம்.

Recommended Video

Samantha Pregnant? Walks out from KRK | Nazriya Pet | Samyuktha Hedge Workout | Yashika Dream

அட அது யார்டா அந்த செல்லம்னு நினைக்கறீங்களா.. அதுதாங்க அவர் ஆசை ஆசையாக வளர்த்து வரும் நாய் ஒரியோ. இன்று அதற்கு பிறந்த நாள் அதனை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலையாள திரைப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நஸ்ரியா நசீம். பலுங்கு என்ற படத்தில் தான் முதன் முதலாக நடித்தார், பின் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நேரம் படம் மூலம் ஹீரோயின் ஆனார்.

ராஜா ராணி

ராஜா ராணி

இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத திரைப்படமாக இருந்தது. இதில் நஸ்ரியாவின் அழகை வர்ணிக்கப்படாத நபர்களே இல்லை. அடுத்து ராஜா ராணி திரைப்படம் அது தான் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையான திரைப்படம் காதலர்கள் அனைவருக்கும் பிடித்தமான படமும் கூட அப்படத்தில் நஸ்ரியா மாடியில் அமர்ந்து ஆர்யாவிடம் பேசும் காட்சிகள் இன்றும் கூட அந்த காட்சியை பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

கடைசிப் படம்

கடைசிப் படம்

இதனை அடுத்து தனுஷுடன் நய்யான்டி படத்தில் நடித்தார், பின் மலையாள பக்கம் சென்ற இவர் ஜெய் நடித்த திருமணம் என்னும் நிக்காஹ தான் இவருக்கு கடைசி தமிழ் திரைப்படம். இதன் பின் தமிழில் நடிக்கவில்லை. இந்த படம் முடிந்த கையோடு இவருக்கு மலையாள சினிமாவில் மாஸ் ஹீரோவான பகத் பாசிலை திருமணம் செய்து வைத்தனர்.

நாய்க்குட்டி

நாய்க்குட்டி

திருமணம் ஆகி சிறிது நாட்களிலேயே ஒரு செல்ல வளர்ப்பு நாய்க்குட்டியை வாங்கியுள்ளார் நஸ்ரியா. பல ஹீரோயின்களுக்கு செல்ல பிராணிகள் என்றால் ரொம்ப பிடிக்கும் அது போல தான் இவரும். இன்று அதற்கு ஐந்தாவது பிறந்த நாள் அதனை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த நாய்க்கு ஒரியோ என்று பெயரும் வைத்துள்ளார்

ஒரியோ நாய்

ஒரியோ நாய்

நஸ்ரியா இந்த ஒரியோவை நன்றாக கவனித்து செல்லமாக வளர்க்கிறார். இதனை ரசிகர்கள் பலர் ஷேர் செய்து வருகின்றனர். என்னதான் சொல்லுங்க நஸ்ரியாவின் நல் மனசை பாராட்டாமல் இருக்க முடியாதுங்க. நாய்க்குட்டி என்றாலும் கூட அதற்கும் பிறந்த நாள் கொண்டாடி அதையும் இன்ஸ்டாவில் போட்டு.. எல்லா நாய்க்கும் இந்த மாதிரி கவுரவம், அன்பு கிடைக்குமா.. சொல்லுங்க.

More from Filmibeat

Read more about: nazriya நஸ்ரியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X