என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்து அசத்திய நஸ்ரியா... வைரலாகும் வீடியோ!
சென்னை : பாடகி தீ மற்றும் அறிவு இணைந்து கலக்கியிருக்கும் என்ஜாய் என்ஜாமி தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு அடிமையாகிப் போக பலரும் டப்ஸ்மாஷ் செய்து அசத்தி வருகின்றனர்.
மொழிகளையும் தாண்டி இந்த பாடல் வைரலாகி வரும் நிலையில் நடிகை நஸ்ரியா என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்து அசத்தியுள்ளார் வீடியோ அவரையும் ஈர்த்து வைரலாகிறது.

ரசிகர்களை வளைத்துப் போட்ட
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நஸ்ரியா தற்பொழுது ஹீரோயினியாகவும் ஜொலித்துக் கொண்டு உள்ளார். தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இவர் முதல் படத்திலேயே தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை வளைத்துப் போட்டதோடு இன்றுவரை இவரது இடத்தை நிரப்ப யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மீண்டும் நடிக்க தொடங்கி
திருமணம் எனும் நிக்கா படத்திற்குப் பிறகு தமிழில் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் உள்ள நஸ்ரியா பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் விலகியிருந்தவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

ரசிகர்களின் பாராட்டுகளை
சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா அடிக்கடி தனது க்யூட்டான சுட்டித்தனமான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வர தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வரும் பிரபல தமிழ் ஆல்பம் பாடலான என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டுள்ள வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

நஸ்ரியா டப்ஸ்மாஷ்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிக்க அவரது மகளும் பாடகியுமான தீ மற்றும் பாடகர் அறிவு இணைந்து பாடி நடித்துள்ள என்ஜாய் என்ஜாமி இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்து எல்லோருடைய மண்டைகுள்ளும் குக்குகுக்கூ என இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்க மொழிகளையும் தேசத்தையும் தாண்டி இப்பொழுது இந்த பாடல் வைரலாகி வருகிறது.
கவனம் ஈர்ப்பு
ஏற்கனவே இந்த பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்து பல திரைப்பிரபலங்கள் வெளியிட்டதோடு பலர் இந்த பாடலை பாராட்டையும் இருக்க தற்பொழுது நடிகை நஸ்ரியா மற்றும் அவரது சகோதரர் நவீன் இருவரும் செம க்யூட்டாக என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டுள்ள வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











