நஸ்ரியா இந்த லாக்டவுன்ல இதைத்தான் பண்ண போறாங்களாம் ... இந்த ஐடியா நல்லா இருக்கே!

சென்னை : மலையாளம் மற்றும் தமிழை தொடர்ந்து முதல்முறையாக தெலுங்கில் அன்தே சுந்தரானிக்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார் நடிகை நஸ்ரியா.

நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல தரமான படங்களைத் தயாரித்து வரும் இவர் திருமணத்திற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

கொரானா பரவல் மீண்டும் நாடு முழுவதும் அதி தீவிரமாக இருக்க இந்த லாக்டவுனில் நான் இப்படித்தான் பொழுதை கழிக்கப் போகிறேன் என கூறி யோசனை ஒன்றை கொடுத்துள்ளார்.

க்யூட்டான நடிப்பு

க்யூட்டான நடிப்பு

தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நஸ்ரியா முதல் படத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு ட்ரீம் கேர்ளாக மாறினார். க்யூட்டான நடிப்பு சின்ன சின்ன எக்ஸ்பிரஸன்கள் என ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிக்க வைத்த இவருக்கு அதைத்தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் குவிய தொடங்கின.

திருமணத்திற்குப் பிறகு

திருமணத்திற்குப் பிறகு

ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும்,திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். வரதன், கும்பலாங்கி நய்ட்ஸ்,சீ யு சூன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இரண்டாவது இன்னிங்சை

இரண்டாவது இன்னிங்சை

தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள நஸ்ரியா முதல்முறையாக தெலுங்கில் அன்தே சுந்தரானிக்கி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகிறார் என்ற செய்தி தெலுங்கு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லாக்டவுனை கழிக்கப் போகிறேன்

லாக்டவுனை கழிக்கப் போகிறேன்

கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிதீவிரமாக பரவிக் கொண்டிருக்க அனைவரும் லாக்டவுனில் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் நஸ்ரியா தான் வீட்டில் வளர்க்கும் செல்ல நாயுடன் தான் இந்த லாக்டவுனை கழிக்கப் போகிறேன் என கூறியுள்ளதை பார்த்த ரசிகர்கள் இந்த ஐடியா நல்லா இருக்கே என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X