Vijay: நிஜமாவே தளபதி வேற லெவல்! கோமாவுக்குப் போன நாசரின் மகன்.. காப்பாற்றிய விஜய்.. புல்லரிக்குதே!
சென்னை: நடிகர் விஜய் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் மற்ற மாநிலங்களிலும் தனக்கு ரசிகர்களைச் சம்பாதித்து வைத்துள்ளார். இவரால் இன்றைக்கு தெரிந்தோ தெரியாமலோ பயனடையும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான நாசரின் மூத்த மகன் ஒருமுறை விபத்துக்குள்ளாகி, கோமா நிலைக்குச் சென்றுள்ளார். கோமா நிலையில் இருந்தவரைக் காப்பாற்றியது விஜய் தான் என நாசர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
தளபதி விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். இந்த வெறித்தனமான ரசிகர்கள் தளபதிக்காக என்னவேண்டுமானாலும் செய்வேன் என்ற மனநிலையில் இருக்கும் ரசிகர்கள்தான். இவர்கள் தளபதியின் படம் ரிலீஸ் ஆகின்றது என்றால், முதல் நாள் முதல் காட்சி மட்டும் பார்க்கமாட்டார்கள், முதல் நாளிலேயே படத்தை மூன்று முதல் நான்கு முறை பார்த்துவிடுவார்கள்.

தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வந்தால், வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். இவர்கள் தங்களின் பிறந்த நாளையோ, தங்களது குடும்பத்தினரின் பிறந்த நாளையோ கூட அந்த அளவுக்கு கொண்டாட மாட்டார்கள். மேலும் தங்களுக்கு குழந்தைகள் பிறந்தால் கூட, அதில் விஜய் என்ற் பெயர் இருக்கும்படியாக பெயர்வைப்பார்கள். இப்படியான ரசிகர்களை விஜய் சம்பாதித்து வைத்துள்ளார்.

நாசர் மகன்: இப்படியான நிலையில் பேட்டி ஒன்றில் மூத்த நடிகர் நாசர் கூறியுள்ள விஷயம் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, நாசரின் மூத்த மகன் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, " எனது மூத்த மகன் தீவிரமான விஜய் ரசிகர். ஒருமுறை அவருக்கு விபத்து ஏற்பட்டு, 14 நாட்கள் சுயநினைவை இழந்துவிட்டார். கிட்டத்தட்ட கோமாவுக்குச் சென்றுவிட்டார்.

விஜய்: கோமாவில் இருந்த எனது மகன் முதன் முதலில் கூறியது அம்மா என்ற சொல்லோ, அப்பா என்ற சொல்லோ இல்லை, முதலில் எனது மகன் கூறிய வார்த்தை விஜய். எனது மனைவி சைகாலஜிஸ்ட் என்பதால், அவரின் அறிவுரைப்படி, நாங்கள் எனது மகனுக்கு தொடர்ந்து விஜய் படங்கள், விஜய் பாடல்கள், விஜய் பேசிய பேச்சுகள் ஆகியவற்றை போட்டுக் காட்டினோம். அதன் பின்னர்தான் அவருக்கு நினைவு திரும்பியது" எனக் கூறினார்.

ஆச்சரியம்: அதன் பின்னர் ஒருநாள் விஜய் நேரடியாகச் சென்று நாசரின் மூத்த மகனைச் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் உள்ளது. நாசர் தனது குடும்பத்தில் நடந்ததைக் கூறியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விஜய்யால்தான் கோமாவுக்குச் சென்ற அவரது மகனுக்கு சுயநினைவு திரும்பியது என்ற தகவல், விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பலரை உருகவும் வைத்துள்ளது.



Click it and Unblock the Notifications











