100 முத்தம் கொடுக்க ஆசைப்படும் நாசர்...யாருக்கு, எதுக்குன்னு தெரியுமா ?
சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட படம் சார்பட்டா பரம்பரை. தியேட்டர்கள் திறக்கப்படாததால் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.

1970 களில் நடப்பது போன்று எடுக்கப்பட்ட இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டது. இந்த படம் ரசிகர்களிடம் மட்டுமல்ல திரைத்துறையினர், விளையாட்டு துறையினர் என பல பிரபலங்களையும் கவர்ந்து, பாராட்டுக்களை குவித்து வருகிறது.
அரசியல், விளையாட்டு, சமூக பிரச்சனை என பலவற்றின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ள சார்பட்டா பரம்பரை படம், இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரையும் பிரபலமாக்கி, கொண்டாட வைத்துள்ளது.
சிறந்த விளையாட்டு படங்களில் ஒன்று என கூறும் அளவிற்கு சார்பட்டா பரம்பரை படமும், அதில் கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டன. இந்த படத்தை பார்த்து விட்டு நடிகர் நாசரும் பா.ரஞ்சித்தை பாராட்டி கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், தம்பி ரஞ்சித், உன்ன நான் பாராட்டமாட்டேன். உங்கையப் புடிச்சி ஒரு நூறு முத்தங் கொடுத்து நன்றின்னு ஒரு வார்த்த மனசார சொல்லுவேன் இப்படி ஒரு படம் எஞ்சமூகத்துக்கு கொடுத்ததுக்கு என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
நாசர், ரஞ்சித்திற்கு எழுதிய இந்த கடிதத்தை நாசரின் மனைவி கமீலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த உருக்கமான எமோஷனல் கடிதம் லைக்குகளை அள்ளி வருகிறது.


Click it and Unblock the Notifications











