முடிவை மாத்திக்கோங்க விஜய்.. ஜன நாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நாசர் வைத்த கோரிக்கை!

சென்னை: "இங்குள்ள 75 ஆயிரம் பேரின் சார்பாக கேட்கிறேன், உங்க முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் விஜய்" என ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் பேச ஒட்டுமொத்த அரங்கமும் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் என கோஷம் போட்டது.

மலேசியாவில் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் நடத்தியது. இயக்குநர் அ. வினோத், ஹீரோயின் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு பிரியாமணி, நாசர், சுனில், நரேன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

Nasser emotional talks and big request to Vijay at Jana Nayagan audio launch

விஜய்க்காக சிறப்பு விருந்தினர்களாக அவரது தம்பிகளான நெல்சன், லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லி உள்ளிட்ட இயக்குநர்கள் கலந்துக் கொண்டு தளபதி பற்றி எமோஷனலாக பேசினர். மீண்டும் விஜய்யை இயக்க வேண்டும், ஆனால், அது இப்போ முடியாது என்று முற்றுப்புள்ளி வைத்தனர்.

என் மகனை எழுந்து நடக்க வைத்தவர் விஜய்: பொதுவெளியில் இதை சொல்லக் கூடாது என நீங்க சொல்லியிருக்கீங்க, ஆனால், எப்போதுமே நான் இதை சொல்வேன், படுத்த படுக்கையாக இருந்த என் மகனை எழுந்து நடக்க வைத்தது விஜய் தான். இந்த நிகழ்ச்சிக்காக நான் கிளம்பும் போது என்னை அழைத்து அப்பா விஜய் அண்ணாவுக்கு பெஸ்ட் விஷஸ் சொல்லிடுங்கன்னு சொன்னான் என எமோஷனலாக பேசினார் நாசர்.

போக்கிரி தான் பிடித்த படம்: விஜய்யுடன் தமிழன், வசீகரா என பல படங்களில் நடித்தாலும் எனக்கு ரொம்பவே பிடித்த படம் போக்கிரி தான். விஜய் எனக்கு ஒரு மகன் போலத்தான். அந்த படத்தில் வருவதை போல "ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என நீங்க டயலாக் பேசலாம், ஆனால், என்னோட வருத்தத்தையும் கோரிக்கையும் இங்கே பதிவு செய்கிறேன் என நாசர் பேச ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது.

முடிவை மாத்திக்கோங்க விஜய்: தேர்தல் களத்தில் வந்த நிலையில், ஜன நாயகன் படம் தான் கடைசி படம் என விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், நாசர் பேசும் போது, இதுதான் கடைசி படம் என சொல்வது ஒரு சக நடிகனாக எனக்கு வருத்தமாக உள்ளது. இந்த முடிவை நீங்கள் மாற்றினால் உங்கள் மீது ஆயிரம் விமர்சனங்கள் வரும். நீங்கள் தேர்வு செய்துள்ள பாதையே விமர்சனங்களுக்கான பாதை தான். ஆனால், இங்கே உள்ள 75 ஆயிரம் ரசிகர்கள் சார்பாக ஒரு கோரிக்கை வைக்கிறேன், மீண்டும் நீங்க படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றார் நாசர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X