கலைத்துறையின் உயரிய விருது... சூப்பர்ஸ்டாருக்கு வாழ்த்து சொன்ன நாசர்!

டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது பெற்றுள்ளார்.

தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்டவர்களும் விருதுகளை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் மற்றும் தேசிய விருது பெற்ற நடிகர்களுக்கு நடிகர் நாசர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் நாசர்

நடிகர் நாசர்

நடிகர் நாசர் தென்னிந்திய மொழிப்படங்களில் நீண்ட காலங்களாக நடித்து வருகிறார். காமெடி, கேரக்டர் மற்றும் வில்லன் ரோல்களில் இவர் அசாத்தியமாக நடித்து வருபவர். பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் டப்பிங் கலைஞர், பின்னணி பாடகர் என்று பன்முகத் திறமை காட்டி வருபவர்.

ரஜினிக்கு பாராட்டு

ரஜினிக்கு பாராட்டு

இந்நிலையில் இன்றைய தினம் டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் கலைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெற்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு நாசர் பாராட்டு தெரிவித்துள்ளார். அபூர்வ ராகங்கள் மூலம் அறிமுகமாகி 46 ஆண்டுகாலமாக திரைத்துறையில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களால் உலகளவில் கொண்டாடப்படுபவர் சூப்பர்ஸ்டார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திரையுலகிற்கு கிடைத்த பெருமை

திரையுலகிற்கு கிடைத்த பெருமை

மேலும் ரஜினிகாந்தின் கலைப்பணிகளுக்கு கலைத்துறையின் உயரிய விருதான சாதாசாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது இந்திய மற்றும் தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த பெருமையாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் கலைப்பயணம் தொடர அனைத்து நடிகர், நடிகைகள் சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து

தேசிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து

மற்றும் தேசிய விருது பெற்ற தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், வெற்றிமாறன், டி இமான், நாக விஷால் உள்ளிட்டவர்களுக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பில் இந்த வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார் நாசர். நடிகர் நாசர், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பான பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய தேர்ந்தெடுத்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவரும் நாசர், பல வெற்றிப் படங்களில் நடித்து பெயர் பெற்றவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X