விஜயகாந்துக்கு சுவாசத்தை சீராக்க டிரக்கியாஸ்டமி சிகிச்சை.. மருத்துவமனையை முற்றுகையிடும் பிரபலங்கள்!
சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்திற்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், திரையுலகினர் அவரை சந்தித்து வருகின்றனர்.
நடிகர் விஜய்காந்த், தீவிர இருமல், காய்ச்சல், சளி காரணமாக மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மருத்துவ அறிக்கை: இதையடுத்து, மியாட் மருத்துவமனை இரு தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விஜய்காந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும், உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லை. நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர் சிகிச்சை: விஜயகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புவதாகவும், அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. இந்த அறிக்கை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே மருத்துவமனை நிர்வாகம் 2வது அறிக்கை வெளிட்டது. அதில், விஜயகாந்த் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார்.
மேலும், சுவாச கோளாறுக்கு நிவாரணம் காணும் வகையில் டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி இணையத்தில் பரவியதை அடுத்து, பதறிப்போன ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவர் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
திரையுலகத்தினர்: இந்நிலையில், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட திரையுலகத்தினர் அவரை சந்தித்து வருகின்றனர். மேலும், அவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால், அவர் பேசமுடியாத நிலையில் இருப்பதால், அவரின் குடும்பத்தினரிடம் விஜய்காந்தின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.


Click it and Unblock the Notifications











