விக்ரமின் #Kadaramkondan மூலம் நடிகராகும் வாரிசு: யார் மகன் தெரியுமோ?
சென்னை: கடாரம் கொண்டான் படம் மூலம் நாசரின் மகன் நடிகராகியுள்ளார்.
ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கடாரம் கொண்டான். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஒரு பாடல் மற்றும் சில சிறு வேலைகள் மட்டுமே பாக்கியுள்ளது.

படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படம் மூலம் நாசரின் மகன் அபி ஹஸன் நடிகராகியுள்ளார். இது குறித்து கடாரம் கொண்டான் தயாரிப்பாளர் கமல் ஹாஸன் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாசரும், கமல் ஹாஸனும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் நண்பரின் மகனை நடிகராக்கியுள்ளார்.
படம் முழுக்க வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபி ஹஸன். படத்தில் அக்ஷரா ஹாஸனுக்கு அவர் தான் ஜோடி. முதல் படமாக இருந்தாலும் அபி அருமையாக நடித்துள்ளாராம்.
அவரின் நடிப்பை பார்த்து விக்ரமே வியந்து பாராட்டியுள்ளார். மேலும் கமல் அபியை தன் அலுவலகத்திற்கு வரவழைத்து நெற்றியில் முத்தமிட்டு பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











