»   »  நாசரை "டாக்டராக்கி" அழகு பார்க்கப் போகும் "வேல்ஸ்"!

நாசரை "டாக்டராக்கி" அழகு பார்க்கப் போகும் "வேல்ஸ்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாசரின் 30 வருட கலையுலக சேவையைப் பாராட்டி வேல்ஸ் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறது.

1985 ம் ஆண்டு கே.பாலசந்தரின் 'கல்யாண அகதிகள்' மூலமாக தன்னுடைய கலைப்பயணத்தை தொடங்கிய நாசர் இதுவரை 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார்.

Nasser will be Conferred with an Honorary Doctorate

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து இன்று தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் தவிர இயக்குநர், பாடகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகங்கள் இவருக்கு உண்டு.தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் நாசர் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் இவருடைய கலையுலக சேவையைப் பாராட்டி வேல்ஸ் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டத்தை வருகின்ற 7ம் தேதி வழங்குகிறது.

7ம் தேதி காலை 9 மணியளவில் முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மாண்புமிகு டாக்டர் பி.எஸ்.சவ்ஹான் அவர்கள் நாசருக்கு டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Nasser will be conferred with an honorary doctorate by Vels University on 7th May.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil