இன்று தயாரிப்பாளர்கள் ஏமாற்றப் படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள்! - நாசர் பேச்சு

By Shankar

இன்று தயாரிப்பாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள் என்றார் நடிகர் சங்கத் தலைவர் நாசர்.

மக்கள் பாசறை வழங்கும், ஆர் கே. நடிக்கும், ஷாஜி கைலாஸ் இயக்கும் படம் 'வைகை எக்ஸ்பிரஸ்'. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது.

நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும் போது, "நான் 500 படங்களைத் கடக்கப் போகிறேன். இங்கு வந்தது இந்த 'வைகை எக்ஸ்பிரஸ் ' படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது என்பதற்காக அல்ல. அதிக சம்பளம் கொடுத்தார்கள் என்பதற்காக வரவில்லை. ஒரு குடும்பம் போல படப்பிடிப்பு மகிழ்ச்சியாக போனது என்பதற்காக வரவில்லை .

Nasser worries about movie producers

எல்லாரும் தொடாத ஒரு விஷயத்தை துணிச்சலாகச் செய்கிறாரே ஆர்.கே... அது வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தவே வந்திருக்கிறேன். தனக்குள் கருக்கொண்ட ஒரு விஷயத்தை செயல்படுத்துவது கடினம். அது ஒரு வலி மட்டுமல்ல அது ஒரு யாகம். அதை ஆர்கே செய்து முடித்திருக்கிறார்.

இன்று தயாரிப்பாளர்கள் படும் வேதனைகள் கொஞ்சமல்ல. இன்று தயாரிப்பாளர்கள் ஏமாற்றப் படுகிறார்கள், அவமானப்படுகிறார்கள் மிரட்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் ஆகே.வின் திட்டம் ஒரு தீர்வாக இருக்கும்.

இன்று 380 ரக விமானம் எல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல் போன்ற எவ்வளவோ வசதியுடன் வந்துவிட்டது. ஆனால் அன்று ஒற்றை விசிறியுடன் தட்டுத் தடுமாறிப் பறந்த ரைட்ஸ் சகோதரர்களை மறக்க முடியாது அல்லவா? அவர்கள் போல் நாளை ஆர்.கேவும் இந்தத் திட்டத்துக்கான முன்னோடியாகப் பேசப்படுவார்," என்றார்.

பெப்ஸி தலைவர் ஆர்.கே . செல்வமணி பேசும் போது, "கொஞ்ச நேரம் ஆர்.கேயுடன் பேசிக் கொண்டிருந்தாலே அவர் வழிக்கு நம்மைக் கொண்டு வந்து விடுவார். அவரை நான் என் படத்தில் அறிமுகப் படுத்தினேன். நன்றி கூறவா.. இல்லை பழிவாங்கவe என்று தெரியவில்லை, என்னை அவர் நடிகராக்கி விட்டார். நடிக்கப்போன பிறகுதான் உலகத்திலேயே மகா கஷ்டமான வேலை நடிப்பதுதான் என்று தெரிந்தது. 1000 கண்கள் நம்மை உற்றுப் பார்க்கும் போது நடிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? படப்பிடிப்புக்குப் போய் தினமும் மாலையில் களைத்து விடுவேன். ஜுரம், தலைவலி எல்லாம் வருவது போலிருக்கும். அப்பப்பா நடிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

இன்று சினிமா அபாய கட்டத்தில் இருக்கிறது. இப்போதுதான் தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் யார் யாரோ எல்லாம் படத்துக்குத் தடை வாங்க முடிகிறது. வெளிவரும் படத்துக்குத் யார் வேண்டுமானாலும் தடை பெறுகிற நிலை உள்ளது.

இந்நிலையில் படம் வெளியாகும் முன்பே டிக்கெட் விற்றிருக்கிற இந்த ஹிட்பாக்ஸ் விநியோகஸ்தர்கள் பாராட்டுக் குரியவர்கள். வாழ்த்துக்கள்,'' என்றார்.

தயாரிப்பாளர் கேயார் பேசும் போது, "இன்று பெரிய பெரிய நடிகர்களுக்கே ஒபனிங் இல்லை என்கிறார்கள். இந்தக் கூட்டத்தைப் பார்த்தால் ஆர்கேவின் நண்பர்கள் பார்த்தாலே 'வைகை எக்ஸ்பிரஸ்' ஓடிவிடும்; வெற்றி பெற்று விடும் என்று கூறலாம்.ஆர்கே வின் புதிய முய்ற்சியைப் பாராட்டுகிறேன்,'' என்றார்.

விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜரத்னம், தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், ஏ.எம்.ரத்னம், பைவ் ஸ்டார் கதிரேசன், நடிகைகள் நீது சந்திரா, கோமல் சர்மா, நடிகர்கள் எம்.எஸ். பாஸ்கர் , மதன் பாப் , மனோபாலா, ரமேஷ் கண்ணா, இப்படத்தில் நடித்துள்ள கேரளாவின் மேடைக் கலைஞர் அனுசந்திரன், ஆர்கேவின் அடுத்த படத்தின் இயக்குநர் சக்திவேல், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

நிகழ்ச்சியில் ஆர்கே வின் புதிய விநியோகத் திட்டமான ஹிட் பாக்ஸ் அமைப்பின் விநியோகஸ்தர்கள் ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X