மெஸ்ஸி படத்தை மார்பில் வரைந்த முதல் நடிகை நடாலியா
மும்பை: இத்தாலிய-உக்ரைன் மாடலும், நடிகையுமான நடாலியா கோலினோவா அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸியின் படத்தை தனது மார்பில் வரைந்துள்ளார்.
உலகமே ஃபீஃபா காய்ச்சலால் தவித்து வருகிறது. ஃபீஃபா உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஜெர்மனி ஆகிய அணிகள் மோதுகின்றன. போட்டிகளை நடத்தும் நாடான பிரேசிலின் அணி அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் நடிகை ஒருவர் மெஸ்ஸி மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மெஸ்ஸி
இத்தாலிய-உக்ரைன் மாடலும், பாலிவுட் நடிகையுமான நடாலியா கோலினோவாவுக்கு கால்பந்து போட்டிகள் என்றால் உயிர். அதிலும் அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரரான மெஸ்ஸி தான் மிகவும் பிடித்த வீரர்.

பாடி ஆர்ட்
மெஸ்ஸி மீது தான் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த முடிவு செய்தார் நடாலியா. இதையடுத்து அவர் மெஸ்ஸியின் புகைப்படத்தை தனது மார்பில் வரைந்துள்ளார்.

முதல் நடிகை
மெஸ்ஸியின் உருவத்தை தனது உடலில் வரைந்துள்ள முதல் நடிகை நடாலியா என்பது குறிப்பிடத்தக்கது.

அன்ஜுனா பீச்
கடந்த 2008ம் ஆண்டு கோவா மாநிலத்தில் உள்ள அன்ஜுனா கடற்கரையில் வெளிநாட்டைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தி படம் அஞ்சுனா பீச்சில் கொலை செய்யப்பட்ட 15 வயது சிறுமியாக நடித்திருந்தார் நடாலியா.

சூப்பர் மாடல்
அஞ்சுனா பீச் படத்தை அடுத்து நடாலியா சூப்பர் மாடல் படத்தில் நடித்தார். இரண்டாவது படத்திலேயே தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருந்தார்.

வெளிநாட்டவர்கள்
பாலிவுட் படங்களில் வெளிநாட்டு நடிகைகள், நடிகர்கள் நடிப்பது புதிது அன்று. நடாலியா பாலிவுட்டில் நடிப்பது தவிர மாடலாகவும் உள்ளார்.


Click it and Unblock the Notifications