TN 2026 பட நாயகன் நட்டி நடராஜ்.. ரஜினிகாந்த் உடன் திடீர் சந்திப்பு.. காரணம் என்ன?
சென்னை: நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் TN 2026,அதாவது தங்க நட்சத்திரம் 2026. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. குறிப்பாக படத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை தான் மறைமுகமாக விமர்சித்துள்ளனர் என்று பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் படத்தில் ஒரு சில காட்சிகள், பெயர்கள் உள்ளிட்டவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைத் தான் மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார்கள் அல்லது விமர்சித்துள்ளார்கள் என்பது போல இருந்தது, என்று படம் பார்த்த பலர் கூறினர்.
இந்நிலையில் படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகும் நிலையில் படத்தில் நடித்த நட்டி நடராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, "நன்றி தலைவரே ஆசீர்வதிக்கப்பட்ட நாள் இன்று" என கேப்ஷன் இட்டுள்ளார். இவரது போஸ்ட் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

தங்க நட்சத்திரம் 2026: இந்த படத்தின் டீசர் வெளியானதுமே நெட்டிசன்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் பலரும், இது நடிகர் விஜய்யை அரசியல் ரீதியாகவும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சீண்டுவது போல் இருக்கிறது. இந்த படத்தை தேர்தல் முடிவு வரை ரிலீஸ் செய்ய தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் பதிவிட்டு வந்தனர். ஆனால் படத்தின் ஆரம்பம் மற்றும் கிளைமேக்ஸ் அதேபோல் இடையில் ஒரு காட்சி மட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை ட்ரோல் செய்வது போல் இருக்கிறது என்று படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோல் படம் பார்த்த பல விஜய் ரசிகர்களும் இந்த படம் நேரடியாக விஜய் அட்டாக் செய்வது போல் இருக்கிறது, இதை திமுகவின் சதி என்றெல்லாம் கூறி வந்தனர்.

காரணம்?: ரஜினிகாந்தை நட்டி நடராஜ் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது எப்படியும் தங்க நட்சத்திரம் 2026 படம் குறித்த பேச்சுக்களும் இருந்திருக்கும். இப்படி இருக்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து விட்டு தான் இவரை அழைத்து பேசியுள்ளார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications