நட்சத்திரம் நகர்கிறது Twitter Review: காதலில் அரசியலை ஏன் கலக்குறீங்க? பா. ரஞ்சித் எழுப்பும் கேள்வி!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி உள்ள பலதரப்பட்ட காதல்களையும் அதன் பின்னணியில் நிலவும் அரசியலையும் சொல்லும் படம் தான் நட்சத்திரம் நகர்கிறது.

ஆண் - பெண் காதலை தாண்டி ஓரினச்சேர்க்கையாளர்களின் காதல், திருநங்கைகள், திருநம்பிகளின் காதல் கதையையும் அவர்கள் சமூகத்தில் சந்திக்கும் சிக்கல்களையும் ஒரு விவாதமாக எடுத்து இந்த படம் மூலம் பேசியுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது படம் எப்படி இருக்குன்னு ட்விட்டர் வாசிகள் என்ன சொல்றாங்க என்பதை இங்கே பார்ப்போம்..

உலகத்தர சினிமா

உலகத்தர சினிமா

இயக்குநர் பா. ரஞ்சித் இந்திய சினிமாவிலேயே வெர்சடைலான இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார். ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாரின் கேமரா வொர்க் இந்த படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடக் கூடிய உலகத்தரமான சினிமா இது என ரமேஷ் பாலா இந்த படத்தை பாராட்டி உள்ளார்.

லைஃப் டைம் ரோல்

லைஃப் டைம் ரோல்

சார்பட்ட பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த துஷாரா விஜயனுக்கு லைஃப் டைம் ரோல் இந்த நட்சத்திரம் நகர்கிறது படத்தில் என ஆர்ஜே ராஜா பாராட்டி உள்ளார். ரெனே எனும் கதாபாத்திரத்தில் பா. ரஞ்சித்தின் லேடீஸ் வெர்ஷனாகவே மாறி பட்டாசாக வெடித்து இருக்கிறார் துஷாரா விஜயன்.

காதலில் அரசியல்

காதலில் அரசியல்

இயக்குநர் பா. ரஞ்சித் படங்கள் என்றாலே அரசியல் நிச்சயம் இருக்கும் என்பதை அவரே பல மேடைகளில் சொல்லி உள்ளார். காதலில் கலக்கப்படும் அரசியலை இந்த நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ஆண் பெண் காதலை தாண்டி அனைத்து விதமான காதல்களிலும் செய்யப்படும் அரசியலை தோலுரித்துக் காட்டி உள்ளார் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

பா ரஞ்சித் அசத்தல்

பா ரஞ்சித் அசத்தல்

ஒரே டைப் படமாக இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான படம் பார்க்க விரும்புவர்களுக்காக இப்படியொரு படத்தை கொடுத்துள்ளார் பா. ரஞ்சித். புறக்கணிப்பதை விட புரியவைப்பது தான் முக்கியம் என்பதை சமூகத்திற்கு உரக்கச் சொல்ல முயற்சி செய்துள்ள இயக்குநர் பா. ரஞ்சித்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X