தேசிய விருது வென்றதும் கதறி அழுத 'மகாராஜா' நடிகை சச்சனா.. நெஞ்சை உருக்கும் பேட்டி!

சென்னை: 2024-ஆம் ஆண்டுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்க்கும் விதமாகப் பல விருதுகள் கிடைத்துள்ளன. அதில், மகாராஜா திரைப்படத்தில் 2 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான தேசிய விருது அனல் அரசுக்கும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இளம் நடிகை சச்சனா நாமிதாஸுக்குச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்டதும் ஆனந்தக் கண்ணீரில் கதறி அழுத நடிகை சச்சனா, செய்தியாளர்களிடம் பேசினார்.

நான் கண்ட கனவுக்கு மேல் கிடைத்த விருது: எனக்குத் தேசிய விருது கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவே இல்லை. நான் கண்ட கனவுக்கு மேல் எனக்கு இந்த மிகப்பெரிய விருது கிடைத்திருக்கிறது. உண்மையிலேயே இந்தத் தருணம் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மக்கள் என் மீது காட்டிய அன்பிற்கு மிகவும் நன்றி. இந்த விருது எனக்குக் கிடைப்பதற்கு முக்கியக் காரணம் என்னுடைய அப்பா, அம்மா மற்றும் என்னுடைய சகோதரி தான். அவர்களின் ஆதரவின் மூலமாகத்தான் இன்று நான் இந்த இடத்தில் நிற்கிறேன்.

72nd National Film Awards Maharaja Sachana Namidass 72
Photo Credit:

அப்பா ஆட்டோ டிரைவர்: என்னுடைய அப்பா ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர், அம்மா டைலரிங் செய்து வருகிறார். நான் ஒரு அரசுப் பள்ளியில் தான் படித்தேன். நாங்கள் மிகவும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஸ்கூல் ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு கூட எங்களிடம் பணம் இருக்காது. ஸ்காலர்ஷிப் வாங்கித்தான் நானும் என் சகோதரியும் படித்தோம். வெறும் 500 ரூபாய் பணத்திற்காகக் கூட நாங்கள் பல நாட்கள் கஷ்டப்பட்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் எங்களை அம்மா, அப்பா மிகவும் நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். அவர்களால் என்னென்ன முடியுமோ, அத்தனை சப்போர்ட்டுகளையும் எனக்காக செய்தார்கள். நான் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்பதற்காகப் பல சினிமா கம்பெனிகளின் ஏறி இறங்கியிருக்கிறோம். ஒரு சிறிய வாய்ப்பாவது கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தோடு 2018ஆம் ஆண்டில் இருந்தே தேடி அலைந்தேன். அப்படிப்பட்ட அத்தனை கஷ்டங்களுக்கும், உழைப்பிற்கும் கிடைத்த பலனாகத்தான் இந்த 2026-ஆம் ஆண்டில் எனக்குத் தேசிய விருது கிடைத்துள்ளது. என்னை விட என் குடும்பத்தில் இருப்பவர்கள் தான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சச்சனா உருக்கமாகப் பேசியுள்ளார்

Read more about: maharaja
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X