என்னா நடிப்பு... என்னா திறமை.... - சாய் பல்லவியை பாராட்டும் நந்திதா தாஸ்

Recommended Video

NGK: Sai Pallavi Speech: என்ன நானே நடிகைன்னு சொல்லி ஏமாத்திட்டு இருக்கேன்- வீடியோ

சென்னை: விராட்டா பர்வம் படத்தில் நடித்த நடிகை நந்திதா தாஸ், தன்னுடன் இணைந்து நடித்த சாய் பல்லவியை வானளாவ புகழ்ந்து, அவருக்கு அற்புதமான திறமை உள்ளது என்று சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி, தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அறிமுகமானதென்னவோ மலையாளத் திரைப்படமான பிரேமம் தான். இந்தப் படத்தை பார்த்த மல்லுவுட் ரசிகர்களும், கோலிவுட் ரசிகர்களும், மலரு மலரு என பைத்தியம் பிடிக்காத குறையாக பினாத்தி வந்தனர்.

National Award Winning Actress Nandita Das Praises Sai Pallavi

தமிழகத்தில் இவருக்கு இருந்த செல்வாக்கினால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், சாய் பல்லவியை தமிழ் படங்களில் நடிக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தார்கள். இருந்தாலும், சாய் பல்லவியோ அதனை மறுத்துவிட்டு தெலுங்கு படங்களில் நடிக்கவே அதிக முன்னரிமை கொடுத்து வந்தார்.

[இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க]

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் கரு என்ற படத்தில் நடித்தார். இருந்தாலும், தமிழக ரசிகர்களிடத்தில் போதுமான வரவேற்பை பெறவில்லை. இதற்கடுத்து நடிகர் தனுஷ் உடன் மாரி 2 படத்தில் நடித்தார். இப்படத்தில் இடம்பெற்ற ஏய் கோலி சோடாவே பாடலை 1 கோடி பேர்களுக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர்.

National Award Winning Actress Nandita Das Praises Sai Pallavi

சாய் பல்லவி, மாரி 2 படத்திற்கு பின்பு என்.ஜி.கே படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க அதிக முன்னுரிமை அளித்து வருகிறார். தற்போது அவர் தெலுங்கில் விராட்டா பர்வம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் இவருடன், தேசிய விருது பெற்ற நடிகை நந்திதா தாஸும் நடித்துள்ளார். இவர், நடிகை சாய் பல்லவியின் நடிப்பு திறமையால் திகைத்துப் போனார். இயக்குனர் வேணு உடுகுலா இயக்கி வருகிற விராட்டா பர்வம் திரைப்படத்திற்காக நடிகை நந்திதா தாஸ் சமீபத்தில் தனது கதாபாத்திரத்தின் பெரும்பகுதியை படப்பிடிப்பு முடித்தார்.

இப்படத்தில் நடிகர் ராணா டகுபதி மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை நந்திதா தாஸும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

National Award Winning Actress Nandita Das Praises Sai Pallavi


அமெரிக்காவில் சிறுநீரக தொடர்பான வியாதிக்கு நடிகர் ராணா டகுபதி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், இயக்குனர் வேணு உடுகுலா சமீபத்தில் நடிகை நந்திதா தாஸ் மற்றும் நடிகை சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமெடுத்து முடித்தார்.

நடிகை சாய் பல்லவியுடன் நடிப்பது ஒரு முழுமையான மகிழ்ச்சி என்றும் அவருக்கு அற்புதமான திறமையிருக்கிறது என்று நடிகை நந்தித தாஸ் பாராட்டினார்.

விராட்டா பர்வாமின் கதை ஆந்திர மாநிலத்தில் இருந்த முன்னாள் நக்சலிசத்தைப் பற்றியது. நடிகை சாய் பல்லவியின் கதாபாத்திரம் தெலுங்கானாவின் பிரபல நாட்டுப்புற பாடகரை அடிப்படையாகக் கொண்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X