National Awards 2022: ஜோதிகாவை தேசிய விருது வாங்க வைத்த சூர்யா… செல்போனில் வீடியோ எடுத்து மகிழ்ச்சி

டெல்லி: 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

சூரரைப் போற்று படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை உட்பட மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டன.

இந்தவிழாவில் சூரரைப் போற்று படத்துக்காக ஜோதிகாவை விருது வாங்க வைத்து அழகு பார்த்தார் சூர்யா.

68வது தேசிய திரைப்பட விருதுகள் விழா

68வது தேசிய திரைப்பட விருதுகள் விழா

68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில்.உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று தேசிய விருதுகளை வழங்கினார். இந்த வருடம் தமிழ்த் திரைப்படங்களுக்கு அதிகமான விருதுகள் கிடைத்துள்ளன. அதிகபட்சமாக சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்துக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளன. சூர்யா, ஜோதிகா, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் குமார், நடிகை அபர்ணா ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

ஜோதிகாவுக்கு தேசிய விருது

ஜோதிகாவுக்கு தேசிய விருது

சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் 2020ல் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியானது. கொரோனா காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பெரிய பட்ஜெட்டில் உருவான சூரரைப் போற்று படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் அவரே சொந்தமான தயாரித்தார். இந்நிலையில், முதன்முறையாக சிறந்த நடிகருக்கான விருதை சூரரைப் போற்று படத்துக்காக சூர்யா பெற்றுக் கொண்டார். அதேமேடையில் ஜோதிகாவுக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.

செல்போனில் வீடியோ எடுத்த சூர்யா

செல்போனில் வீடியோ எடுத்த சூர்யா

சூரரைப் போற்று படம் மொத்தம் 6 பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. அதில், சிறந்த படம் என்ற கேட்டகரியிலும் சூரரைப் போற்று தான் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதனால், சூரரைப் போற்று படத்தின் தயாரிப்பாளராக ஜோதிகாவும் தேசிய விருது பெற்றுகொண்டார். சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா பெற்றுக்கொண்டதால், தயாரிப்பாளருக்கான விருதை ஜோதிகாவை வாங்க வைத்து அழகு பார்த்தார் சூர்யா. அதுமட்டும் இல்லாமல் ஜோதிகா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருது பெற்றதை செல்போனிலும் வீடியோ எடுத்து மகிழ்ந்தார்.

சூர்யா - ஜோதிகாவுக்கு குவியும் வாழ்த்து

சூர்யா - ஜோதிகாவுக்கு குவியும் வாழ்த்து

சூர்யா - ஜோதிகா இருவரும் ஒரே காலக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகினர். ஒன்றாக படங்களில் நடிக்கும் போது காதலிக்கத் தொடங்கிய சூர்யாவும் ஜோதிகாவும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ஜோதிகாவின் வருகைக்குப் பின்னர் கேரியரில் மாஸ் காட்டிய சூர்யா இப்போது தேசிய விருதும் பெற்றுவிட்டார். அதேபோல் ஜோதிகாவும் தயாரிப்பாளராக தேசிய விருது வாங்கியுள்ளார். இதனையடுத்து சூர்யா, ஜோதிகா இருவருக்கும் திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X