twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குதறிப்போட்ட கொரோனா வைரஸ்.. தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தள்ளி வைப்பு.. இயக்குனர் தகவல்!

    By
    |

    டெல்லி: தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    Recommended Video

    'வீட்டைத் தாண்டி நீயும் வரகூடாது, நானும்..' வடிவேலுவின் அடுத்த வீடியோ!

    இந்திய திரையுலகில் சாதனை படைப்போருக்கு ஒவ்வொரு வருடமும் தேசிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன.

    இந்த ஆண்டுக்கான, 67 வது தேசிய திரைப்பட விருதுகள் மே மாதம் 3 ஆம் தேதி வழங்கப்பட இருந்தது.

    கட்டுக்கோப்பான உடல்.. விஷ்ணு விஷால் ஒர்க் அவுட்.. தம்பியை முதுகில் ஏற்றி சாகசம் !கட்டுக்கோப்பான உடல்.. விஷ்ணு விஷால் ஒர்க் அவுட்.. தம்பியை முதுகில் ஏற்றி சாகசம் !

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    இந்நிலையில் கொரோனா வைரஸ் முழுவதுமாக எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 லட்சத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.

    அதிகரிக்கிறது

    அதிகரிக்கிறது

    இந்தியாவிலும் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு பிறப்பித் திருந்தாலும் நாளுக்கு நாள் இந்த வைரஸின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 775 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    நடைமுறைகள்

    நடைமுறைகள்

    இந்நிலையில், மே மாதம் 3 ஆம் தேதி நடக்கும் தேசிய திரைப்பட விருது விழா காலவரையறை இன்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தேசிய திரைப்பட விருதுக்கான ஜூரிகளின் தலைவராக, கடந்த வருடம் இருந்த இயக்குனர் ராகுல் ராவைல் கூறும்போது, திரைப்பட விருது விழா நடைமுறைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    நீக்கப்படும் வரை

    நீக்கப்படும் வரை

    அவர் மேலும் கூறும்போது, விருதுக்கான படங்களை தேர்வு செய்யும் நடுவர்கள் இன்னும் கூடவில்லை. அதற்காக அரசைக் குறை கூற முடியாது. இந்த இக்கட்டான சூழலில், அவர்களுக்கு வேறு முக்கியமான வேலைகள் இருக்கின்றன. லாக்டவுன் முழுமையாக நீக்கப்படும் வரை அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றார். இதனால் இந்த வருட விருது விழா இப்போது நடைபெறாது எனத் தெரிகிறது.

    கீர்த்தி சுரேஷ்

    கீர்த்தி சுரேஷ்

    66 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டன. விருதுகள் டிசம்பர் மாதம் வழங்கப்பட்டன. இதில் சிறந்த நடிகைக்கான விருது 'மகாநடி' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேசுக்கு வழங்கப்பட்டது. தமிழில் சிறந்த படமாக பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய 'பாரம்' தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

    English summary
    National film Awards, scheduled to be conducted on May 3, postponed indefinitely amid coronavirus lockdown.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X