எந்த படத்திற்கு போனாலும் டிக்கெட் விலை ரூ.99 மட்டுமே... உடனே புக் செய்யுங்க!
சென்னை: தேசிய சினிமா தினம் அக்டோபர்13ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தியா முழுவதும் திரைப்பட டிக்கெட்டின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்தாலும் தியேட்டருக்கு சென்று விசில் அடித்து படம் பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதேசமயம் தியேட்டர்களுக்கு படம் பார்க்க மக்களை வரவழைக்கும் பொருட்டு சலுகை விலையில் டிக்கெட்டுகள், பெண்களுக்கு தனி காட்சிகள் என தியேட்டர் நிர்வாக மாஸ் காட்டுவது உண்டு.

தேசிய சினிமா தினம்: இந்நிலையில், அக்டோபர் 13 ஆம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்படும் என்று மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (MAI) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் சினிமா ரசிகர்களை கவரும் வகையில் ரூ.99 மட்டுமே வசூலிக்கப்படும் என தேசிய மல்டிபிளக்ஸ் வர்த்தக அமைப்பு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
டிக்கெட்டின் விலை ரூ.99: PVR INOX, Cinepolis, Miraj மற்றும் Delite உட்பட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ்களில் 4,000 க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் தேசிய சினிமா தின கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ளன. இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் பல படங்களின் நம்பமுடியாத வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா இந்த சலுகையை அறிவித்துள்ளது. அந்த வகையில் அக்டோபர் 13ந் தேதி மட்டும் 99 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படும் என்பதால், சினிமா பிரியர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

பயன் பெறுவார்கள்: 2020-ம் ஆண்டு நிகழ்ந்த கொரோனா பரவலால் தியேட்டர்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டது.. திரையரங்குகள் பெரும் இழப்பைச் சந்தித்தன. கடந்த ஆண்டு, தேசிய சினிமா தினம் உலகளவில் துவங்கி, டிக்கெட் விலையை வெறும் 75 ரூபாய்க்கு கொடுத்தது. இதனால், கடந்த ஆண்டு 6.5 மில்லியன் மக்கள் திரையரங்குகளில் இந்த சலுகையை அனுபவித்தனர். தற்போது தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications











