மீரா சோப்ரா புகார்.. தலையிட்ட மகளிர் ஆணையம்.. பூதாகரமாகும் பிரச்சனை.. மெளனம் காக்கும் ஹீரோ!
ஹைதராபாத்: பிரபல டோலிவுட் நடிகரின் ரசிகர்கள் நடிகை மீரா சோப்ராவுக்கு விடுத்த கொலை மிரட்டல் விவாகரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற #AskMeera கேள்வி பதில் நேரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் யார் என்றே தெரியாது என எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தில் நடித்த மீரா சோப்ரா கூறியது, ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கியது.
சமூக வலைதளங்களில் வரம்பு மீறி ஆபாச வார்த்தைகளை பேசி வரும் நெட்டிசன்கள், மீரா சோப்ராவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

கொலை மற்றும் பலாத்கார மிரட்டல்
ஜூனியர் என்.டி.ஆரை தெரியாது என்றும், தனக்கு டோலிவுட்டில் மகேஷ் பாபுவைத் தான் பிடிக்கும் என்றும் நடிகை மீரா சோப்ரா கூறியதை கேட்டு ஆத்திரமடைந்த சில ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீரா சோப்ராவை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், நீ ஒரு ஆபாச நடிகை என்றும், உன்னை கூட்டு பலாத்காரம் செய்து கொல்வோம் என்றும் மிரட்டல் விடுத்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

வழக்குப் பதிவு
இதனால் ஆத்திரமடைந்த மீரா சோப்ரா, இந்த விவகாரத்தை சாதாரணமாக தான் எதிர்கொள்ள போவதில்லை என்றும் ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என சைபர் கிரைம் மற்றும் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். மேலும், ஜூனியர் என்.டி.ஆருக்கு நேரடியாகவே டிவீட் போட்டு இந்த விவகாரம் குறித்து கேள்வியும் எழுப்பியுள்ளார்.

வாய் திறக்காத தாரக்
இப்படி ஒரு பிரச்சனை பூதாகரமாக எழுந்துள்ள நிலையில், நேரடியாக தன்னிடம் ஒரு நடிகை உங்கள் ரசிகர்கள் செய்தது சரியா என கேள்வி எழுப்பி இருந்தும், இதுவரை எந்த பதிலையும் ஆர்.ஆர்.ஆர் நடிகர் தாரக் கூறாமல் மெளனம் காத்து வருவது மேலும் சிக்கலையும் சர்ச்சைகளையும் கிளப்பி வருகிறது.
Recommended Video
தலையிட்ட மகளிர் ஆணையம்
மீரா சோப்ராவுக்கு இந்த விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு, ஹைதராபாத் நகர காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் ஒன்றையும் பதிவு செய்திருக்கிறது. சம்பந்தபட்ட அந்த ஐடிகளுக்கு சொந்தக்காரர்களை தேடி பிடித்து கைது செய்யும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், உங்களுக்கு மகளிர் ஆணையம் துணை நிற்கும் என்றும் ரேகா சர்மா டிவீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











