பிக் பாஸில் பிளர் செய்யப்பட்ட தேசியக் கொடி.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அப்செட்.. என்ன ஆச்சு?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் தனது அமரன் படத்தை புரமோட் செய்ய நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருந்தது ரசிகர்களை செம சர்ப்ரைஸ் ஆக்கியது. ஆனால், கடைசியாக ரசிகர்கள் வருத்தப்படும்படியான சம்பவம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தார். இந்தியன் 2 படம் உள்ளிட்ட பல்வேறு புரமோஷன்களை பிக் பாஸ் வீட்டில் செய்துள்ளார். மேலும், பல நடிகர்கள் தங்கள் படங்களின் புரமோஷன்களை செய்துள்ளனர்.

bigg boss tamil 8 sivakarthikeyan amaran 8

இந்நிலையில், இன்று சிவகார்த்திகேயன் நடத்திய புரமோஷனின் போது அனைவருக்கும் தேசியக் கொடி பேட்ஜ் வழங்கப்பட்டது. ஆனால், ஒளிபரப்பும் போது அதை பிளர் செய்து விட்டனர். இந்திய தேசியக் கொடியை பிளர் செய்தது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சுதந்திர தின நிகழ்ச்சிகள்: விஜய் டிவி உள்ளிட்ட அனைத்து டிவி சேனல்களிலும் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடத்தும் போது இந்திய தேசியக் கொடியை பல முறை காட்டி பயன்படுத்தியுள்ளனர். நடிகர் அர்ஜுன் தனது கையிலேயே தேசியக் கொடியை பச்சைக் குத்தியுள்ளார். அவரை வைத்தும் ஷோக்கள் டிவி சேனல்களில் இடம்பெற்றுள்ளன. பல்வேறு படங்களில் தேசியக்கொடியை பயன்படுத்தியுள்ளனர்.

பிளர் செய்யப்பட்ட தேசியக் கொடி: ஆனால், இன்று ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் எபிசோடில் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து தனது அமரன் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை போட்டுக் காட்டினார். அந்த படத்தை பற்றியும் மேஜர் முகுந்த் வரதராஜன் மனைவி மற்றும் பெற்றோர்கள் என்ன சொன்னார்கள் என்பது குறித்தும் பேசினார். கடைசியாக போட்டியாளர்கள் அனைவருக்கும் தேசியக் கொடி பேட்ஜ் கொடுக்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் உள்பட அனைவரும் அதை அணிந்துக் கொண்டு நின்றனர். அந்த காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் போது அனைவர் நெஞ்சிலும் பேட்ஜ் இருந்த இடம் பிளர் செய்யப்பட்டது ரசிகர்களை ஷாக் ஆக்கியது. தேசியக் கொடியை பிக் பாஸ் டீம் ஏன் பிளர் செய்ய வேண்டும் என்றும் இதில் என்ன தவறு என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

bigg boss tamil 8 sivakarthikeyan amaran 8

விஜய் சேதுபதி விளக்கம் அளிப்பாரா?: இதற்கு சனிக்கிழமை ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஹோஸ்ட்டான விஜய் சேதுபதி விளக்கம் அளிப்பாரா? என்றும் விஜய் டிவி உரிய விளக்கம் அளிக்குமா? தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாதா/ அதற்கு ரைட்ஸ் இல்லையா? போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X