விஜய் வீட்டிலும் தேசியக் கொடி பறக்குது.. மூவர்ண விளக்குகளால் தெருவே ஜொலிக்குது!

சென்னை: வரும் திங்கட்கிழமை ஆகஸ்ட் 15ம் தேதி 75வது ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

பிரதமர் மோடி மக்கள் அனைவரையும் தங்களது சமூக வலைதள பக்கங்களின் முகப்பு புகைப்படங்களில் தேசியக் கொடியை வைக்குமாறு கோரிக்கை வைத்தார்.

மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கொடிக்கு மரியாதை

கொடிக்கு மரியாதை

75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிக்கு முக்கியத்துவமும் மரியாதையையும் நாட்டு மக்கள் அனைவரும் கொடுக்க வேண்டும் என்கிற முன்னெடுப்பை பிரதமர் மோடி எடுத்துள்ளார். மேலும், அவரது கோரிக்கையை ஏற்று பலரும் தங்கள் சமூக வலைதள புரொஃபைல் பிக்சரை மாற்றி உள்ளனர். மேலும், வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

புரொஃபைல் பிக்சரில் தேசியக் கொடி

புரொஃபைல் பிக்சரில் தேசியக் கொடி

நடிகர் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தேசியக் கொடியை தங்களது புரொஃபைல் பிக்சர்களாக மாற்றி உள்ளனர். கோலிவுட்டில் மற்ற முன்னணி நடிகர்கள் ஏன் டிபியை மாற்றவில்லை என்கிற விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. நடிகை குஷ்பு, நடிகர் பிரசன்னா உள்ளிட்ட சில நடிகர்கள் தேசியக் கொடியை டிபியாக மாற்றி உள்ளனர்.

விஜய் வீட்டில் கொடி பறக்குது

விஜய் வீட்டில் கொடி பறக்குது

இந்நிலையில், நடிகர் விஜய்யின் வீட்டில் தேசியக் கொடி அழகாக பறக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. தனக்கும் தன் நாட்டின் மீதும், நாட்டு கொடியின் மீது தேசப்பற்று நிறையவே இருக்கு என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் நடிகர் விஜய்.

தெருவே ஜொலிக்குது

தெருவே ஜொலிக்குது

வீட்டில் தேசியக் கொடியை ஏற்றியது மட்டுமின்றி நடிகர் விஜய்யின் தெருவே மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய்யின் வீட்டில் தேசியக் கொடி ஏற்றப்பட்ட நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் தங்களது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

வாரிசு அப்டேட்

வாரிசு அப்டேட்

சுதந்திர தினத்துக்கு வாரிசு படத்தின் புதிய அப்டேட் ஏதும் இருந்தால் விடுங்க என இயக்குநர் வம்சியிடம் விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கோரிக்கை வைத்து வருகின்றனர். தளபதி 67 பற்றிய தாறுமாறு அப்டேட்களை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ள நிலையில், வாரிசு மற்றும் தளபதி 67 படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X