twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜய் தேவ்கனுக்கு அந்த காண்டு தான்.. இந்தி மேல எல்லாம் பாசம் இல்லை.. விளாசும் நெட்டிசன்கள்!

    |

    மும்பை: பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பவருக்கு திடீரென இந்தி மொழி மீது எப்படி இவ்வளவு பாசம் வந்து விட்டது என இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு மொழி பேசும் நெட்டிசன்கள் நடிகர் அஜய் தேவ்கனை வெளுத்து வருகின்றனர்.

    சிங்கம், த்ரிஷ்யம் படங்களை ரீமேக் செய்து நடித்து ஹிட் கொடுத்த அஜய் தேவ்கன் எப்படி கிச்சா சுதீப்பை பார்த்து கன்னட படங்களை இந்தியில் டப் செய்யக் கூடாது என சொல்லலாம் என தென்னிந்திய ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக படை திரண்டு விட்டனர்.

    பிரச்சனையை சுமூகமாக முடித்து அஜய் தேவ்கனை சேவ் பண்ணவே கிச்சா சுதீப் அப்படியொரு விளக்க ட்வீட்களை போட்டிருந்தாலும், அஜய் தேவ்கனின் உள் மனசுல என்ன இருக்கு என்பது தெரிந்து விட்டது என பலரும் அவரை விளாசி வருகின்றனர்.

    இதே நான் கன்னடத்தில் போட்டா உங்க நிலைமை என்ன ஆகும்.. அஜய் தேவ்கனுக்கு பதிலடி கொடுத்த கிச்சா சுதீப்!இதே நான் கன்னடத்தில் போட்டா உங்க நிலைமை என்ன ஆகும்.. அஜய் தேவ்கனுக்கு பதிலடி கொடுத்த கிச்சா சுதீப்!

    குட்கா கேங்

    குட்கா கேங்

    விமல் எலாய்ச்சி விளம்பரத்தில் நடித்ததற்காக சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு முன்னதாக அதே விளம்பரத்தில் பல காலமாக நடித்து வரும் அஜய் தேவ்கன் எந்தவொரு மன்னிப்பும் கேட்கவில்லை. இந்நிலையில், இந்த குட்கா கேங்கிற்கு யாராவது புரிய வைங்க, இந்தி நம் தேசிய மொழி இல்லை என நெட்டிசன்கள் பாடம் எடுத்து வருகின்றனர்.

    ரீமேக் நாயகன்

    ரீமேக் நாயகன்

    சிங்கம், த்ரிஷ்யம் படங்களை ரீமேக் செய்து பாலிவுட்டில் ஹிட் கொடுத்து விட்டு தற்போது கிச்சா சுதீப்பிடம் ஏன் இந்தியில உங்க மொழி படங்களை ரீமேக் செய்றீங்க என கேட்கிறாரே.. இந்தி மீது எந்தவொரு வெறுப்புணர்வும் இல்லை. ஆனாலும், இந்தி தேசிய மொழி கிடையாது. அதுவும் மற்ற மொழிகளை போலவே சிறம்பம்சம் கொண்ட ஒரு மொழி என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

    பான் மசாலா நடிகர்கள்

    பான் மசாலா நடிகர்கள்

    "இந்தி தேசிய மொழி அல்ல.. பான் மசாலா ஸ்டார்ஸ்.. Hindi is Not a National Language, Pan Masala Stars" என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அஜய் தேவ்கனுக்கு புரிவது போல ட்வீட் போட்டு நம்ம ஊர் நெட்டிசன்களும் பாலிவுட் நடிகரை பந்தாடி வருகின்றனர்.

    இந்தியை மறந்தவர்

    இந்தியை மறந்தவர்

    சிங்கத்திற்கு இந்தியில் 'ஷெர்' எனும் வார்த்தை உள்ளதையே மறந்து விட்டு, தமிழில் வெளியான நடிகர் சூர்யாவின் சிங்கம் படத்தை அதே டைட்டிலில் அப்படியே எடுத்து ரீமேக் செய்தவர் தான் தற்போது இந்தியின் பெருமையை பேசி வருகிறார். இவருக்கு இந்தி மீதெல்லாம் பாசமில்லை, கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர் படங்கள் பெற்ற வசூல் மீதுதான் காண்டு என ட்ரோல் செய்து வருகின்றனர்.

    English summary
    After Ajay Devgn’s tweet about Hindi, "National Language" trending in Twitter and Netizens slams Ajay Devgn for his recent post.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X