நட்டியின் வெப் படம்... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சென்னை : நடிகர் நட்டி நட்ராஜ் தொடர்ந்து கோலிவுட்டில் சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் சில படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அவர் நாயகனாக நடிக்கும் த்ரில்லர் படமான வெப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் நட்ராஜ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் நட்டி நட்ராஜ். பல படங்களில் கேரக்டர் ரோல்களிலும் வில்லன் கதாபாத்திரத்திலும் ஹீரோ கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தன்னுடைய நடிப்பை ஒரு வட்டத்தில் சிக்க வைக்காமல் பல கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

அலட்சியமான நடிப்பு
இவரது நடிப்பில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படம் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்தது. அலட்சியமான கதாபாத்திரங்களில் அநாயாசமாக நடித்துவிடுவார் நட்ராஜ். இந்நிலையில் இவர் ஹீரோவாக நடிக்கும் வெப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சைக்கோ த்ரில்லர்
அறிமுக இயக்குநர் ஹாரூன் என்பவர் இயக்கிவரும் இந்தப் படத்னை ட்ரீம் ஹவுஸ் சார்பில் விஎம் முனிவேலன் தயாரித்து வருகிறார். சைக்கோ த்ரில்லராக இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் நட்ராஜிற்கு 4 கதாநாயகிகள்.

தயாரிப்பாளர் பிறந்தநாள்
இந்தப் படத்தின் சூட்டிங் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் முனிவேலனின் பிறந்தநாளை படக்குழுவினர் சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டத்தின்போது நட்டி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

4 ஹீரோயின்கள்
அனன்யா மணி, சப ப்ரியா, சாஸ்திரி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நட்ராஜிற்கு ஜோடி சேர்ந்துள்ளனர். காளியும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் துவங்கிய இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்றைய தினம் வெளியிட்டுள்ளனர்.

பர்ஸ்ட் லுக் வெளியீடு
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் தளத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் கால் தடி மற்றும் அதில் ரத்தக் கரையுடன் கொடூரமாக போஸ் கொடுத்துள்ளார் நட்டி. நடராஜூம் போஸ்டரை ஷேர் செய்துள்ளார். படத்திற்கு கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











