ஸ்டைலாக சிகரெட் புகையை ஊதித்தள்ளும் ஷில்பா மஞ்சுநாத்.. வெப் படத்தோட மிரட்டல் காட்சிகள்!
சென்னை : நடிகர் நட்டி, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் வெப்.
த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நட்ராஜ் ஹீரோவாகவும் மொட்டை ராஜேந்திரன் முக்கியமான கேரக்டரிலும் நடித்துள்ளனர்.
காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷில்பா மஞ்சுநாத் இந்தப் படத்தில் வித்தியாசமான கோணத்தில் நடித்துள்ளார்.

ரசிகர்களை கவரும் நட்டி
நடிகர் நட்டி நட்ராஜ் சிறப்பான பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இதன்மூலம் ரசிகர்களை கவர்ந்த நட்ராஜ், தற்போது ஹீரோவாக, வில்லனாக, கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். தனது நடிப்பின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் கர்ணன் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.

அடுத்தடுத்த படங்கள்
முன்னதாக நாளை, மிளகா, சதுரங்க வேட்டை, நம்ம வீட்டு பிள்ளை, வால்டர் உள்ளிட்ட படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நட்டி, தற்போது சம்பவம், இன்ஃபினிட்டி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்தப் படங்களின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப் படம்
இதனிடையே ஷில்பா மஞ்சுநாத், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள வெப் படத்திலும் நட்ராஜ் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஹரூன் என்பவர் இயக்கியுள்ளார். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காளி, இஸபேட் ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த டீசர்
இவரது கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்துள்ளது. படத்தின் டீசர் சமபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த காட்சிகளில் ஷில்பா, போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தனியொரு ரூமில் அதை அனுபவித்து வரும் நிலையில்,அவரது அம்மா அவரை அழைக்கிறார். இப்படியாக அந்த காட்சிகள் காணப்படுகின்றன.

சிகரெட்டை ஊதித்தள்ளும் ஷில்பா
இந்தக் காட்சிகளில் சிகரெட்டை ஊதித் தள்ளுகிறார் ஷில்பா. இந்தக் காட்சியில் தேர்ந்த சிகரெட் புகைப்பவரை போல அவரது நடிப்பு காணப்படுகிறது. இந்த படத்தில் நட்டியின் கதாபாத்திரம் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பை இந்தப் படத்தின் டீசர் மற்றும் காட்சிகள் ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications











