ஒரு வாரத்திற்கு பிறகு ஆர்யா போட்ட ட்வீட் யாரை பற்றி தெரியுமா?
சென்னை : 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யாரையுமே திருமணம் செய்யாமல் நிகழ்ச்சியை முடித்த ஆர்யா, ட்விட்டரில் நடிகர் மாஸ்டர் மகேந்திரனின் லேட்டஸ்ட் வொர்க்-அவுட் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
சரத்குமார் ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்த 'நாட்டாமை' படத்தில் சிறுவனாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். ஒரு பஞ்சாயத்து காட்சியில் 'நான் பாத்தேன்.." என சாட்சி சொல்வபவராக நடித்திருப்பார். அதுதான் அவர் அறிமுகமான படம்.

அதன்பிறகு, நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான மகேந்திரனுக்கு தமிழ்நாடு அரசு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதுகளையும், தெலுங்கு அரசு நந்தி விருதுகளையும் வழங்கியுள்ளது.
'விழா' படத்தில் ஹீரோவாக நடிக்கத்தொடங்கிய மகேந்திரன் அதன்பிறகு ஒருசில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். குட்டிப் பையனாக இருந்த மகேந்திரன் தற்போது பாடி பில்டர் போல காட்சியளிக்கிறார்.
ஜிம்மில் வொர்க்-அவுட் செய்து செம ஃபிட்டாக இருக்கிறார் மகேந்திரன். இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 27 வயதாகும் மகேந்திரனை குழந்தை நட்சத்திரமாக நடித்த பையனா இது என பலரும் ஆச்சரியமாகப் பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











